பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் - இராமேச்சரம் 293

குமிழி-98 34. திருத்தலப் பயணம் - இராமேச்சரம்

முர்த்தி தலம் தீர்த்தம்

முறையால் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும்

வாய்க்கும் பராபரமே”

மக்கட்பேறு இல்லாத குறையை நினைத்து அடிக்கடி என் அன்னையார் கவலைப்படுவதுண்டு, பேரன் அல்லது பேத்தியைத் துக்கிக் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் இருக்குமல்லவா? ஆனால் என் மனைவி இத்தகைய கவலையை வெளிக்காட்டவில்லை. என் மனத்தில் இக் கவலை துறையூரில் இருந்தவரை எழவில்லை. பள்ளிப் பிள்ளைகள் அனைவரையுமே என் குழந்தைகளாகப் பாவிக்கும் எண்ணத்தை இறைவன் தந்தமையே இதற்குக் காரணமாகும். தவப் பயணம் மேற்கொள்ள வேண்டும், இராமேச்சரத்தில் சர்ப்பசாந்தி செய்ய வேண்டும், நாகர் பிரதிட்டை செய்ய வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வெளியிடுவார்கள் என் அன்னையார். அவர்களின் மனக் குறையைத் தீர்த்து வைப்பதற்காக 1948 கோடை விடுமுறையில் இத்திருத் தலப்பயணத்தை மேற்கொள்ளவும் இராமேச்சரத்தில் என் அன்னையார் கருத்தை திறை வேற்றவும் திட்டம் இட்டேன்.

கோட்டாத்தூரில் என் இல்லத்தருகில் இருந்தவர் சின்னப்பண்ணை அரங்கசாமி ரெட்டியார். முதல் மனைவி

1. தா. ப; பராபரக்கண்ணி.156