பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 நினைவுக் குமிழிகள்-2

திருமணமாகிச் சில ஆண்டுகளில் இறந்து விட்டமையால் இரண்டாந்தாரமாக இன்னொரு பெண்மணியை மணந்து கொண்டவர். திருமணம் ஆகி இருபது ஆண்டுகள் ஆகியும் மக்கட்பேறு இவருக்கு வாய்க்கவில்லை. இவரையும் இவர் துணைவியையும் எங்கட்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டோம். இவரது கொழுந்தி (வயது முதிர்ந்த மூதாட்டி), என் மாமியார் (வயது முதிர்ந்த மூதாட்டி), என் அன்னையார் கோட்டாத்துாரில் இன்னோர் அம்மையார் (கைம்பெண்) இக் குழுவில் சேர்ந்தனர்; என் மைத்துனரின் முதல் மனைவி (அண்மையில் தன் ஒரே மகனை - என் வளர்ப்புப் பிள்ளையை - இழந்தவர்) எங்கள் குழுவில் சேர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்து எருமைப்பட்டியி லிருந்து வந்து சேர்ந்தார்கள்.

என்னுடன் தொடக்க நிலைப்பள்ளியில் படித்த கே. பி. சுப்பையர் என்பவரையும் (சோதிடர், பஞ்சாங்கம், பிராஞ்ச் ஆபீஸ் போஸ்டுமாஸ்டர்) துணையாகச் சேர்த்துக் கொண்டோம். முன்கூட்டியே பஞ்சாங்கக் காரியத்திற்கும் அஞ்சல் வேலைக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டு எங்களுடன் சேரத் தயாராக இருந்தார். இராமேச்சரத்தில் வைதிகச் சடங்குகள் செய்வதற்குத் துணையாக இருக்கட்டும் என்றே இவரை வேண்டிச் சேர்த்துக் கொண்டோம். தவிர, இவர் என் பள்ளித் தோழராதலால் இவர் மீது தனிப்பாசம் வைத்திருந்தேன். துறையூரிலிருந்து கோட்டாத்தூருக்கு வரும் போதெல்லாம் ஒரு வேளையாவது இவர் அகத்தில் சிற்றுண்டி காப்பி கொள்ளாவிட்டால் மிகவும் வருந்துவார். இவர் தவிர, துறையூர்ப் பள்ளி உணவு விடுதியில் தவசிப் பிள்ளையாக (Cook) பணியாற்றிய 'தம்பு (பெயர் நினைவு இல்லை) என்று அழைக்கப்படும் இளைஞரையும் எங்கட்கு உணவு தயாரிப்பதறகாக நியமித்துக் கொண்டோம். பள்ளி