பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் 7

அண்மையிலுள்ள பெருமாள் மலையில் எழுந்தருளியிருக்கும் பிரசன்ன வேங்கடாசலபதிக்குத்தான் வெளிச்சம். இவருக்கு "உலகியலும் தெரியாது என்பது என் கணிப்பு; பலரது அநுபவமும் இந்த முடிவுதான்.

இளையவர் முத்து வேங்கடாசலதுரை கல்வித்துறையில் ஊக்கமும் ஆர்வமும் இல்லாதவராக இருந்தாலும், சட்ட நுணுக்கம் போதாதவராக இருந்தாலும், உலகியல் அறிந்த சதுரர். இல்லாவிட்டால் பள்ளியை ஒரு வாணிகம் போல்ஒருதொழில்போல்-நடத்த முடியுமா?வெல்லப் பிள்ளையார் செய்தானாம் ஒருவன். அதன் நைவேத்தியத்திற்கு செலவு செய்ய மனம் அவனுக்கு இல்லை. ஆனால் அவனது கூர்த்த மதியில் ஓர் அற்புதமான எண்ணம் உதித்தது. பிள்ளையார் வெல்லத்தால் ஆனது என்பதை உணர்ந்த அவன் அதன் தலையிலேயே கொஞ்சம் வெல்லத்தைக் கிள்ளி எடுத்து அதனையே நைவேத்தியப் பொருளாக அந்தப்பிள்ளை யாருக்கு வைத்துப் படைத்தானாம்! இந்த வெல்லம் பிள்ளையார் செய்தவனைப் போன்றவர் முத்துவேங்கடாசல துரை; பள்ளியை நடத்திய விதமும் அவன் நைவேத்தியம் செய்த கதையைப் போன்றதுதான். இப்படிப் பள்ளி நிர்வாகம் அற்புதமாக- நிர்வாகத்தினர் கையைக்கடிக்காமல்நடைபெற்றது. ஆசிரியர்களின் உழைப்பின்மீது கட்டடங் கள் கட்டப்பெற்றன. எஞ்சியிருந்த பணம் கற்பனைச் செலவுக்காகத் தயாரிக்கப் பெற்ற பற்றுச் சிற்றுகளில் மறைந்து நிர்வாகத்தினர் கையில் மூலதனமாயிற்று. அந்தக் காலத்தில் பெரும்பாலான தனியார்ப்பள்ளிகளின் வரலாறு இதுதான். பெரும்பாலான பள்ளிகளின் நிர்வாகம் ஆசிரியம் பெரு மக்களின் குருதியை அட்டைபோல் உறிஞ்சிக் கொண் டிருந்தது.