பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் - இராமேச்சரம் 295

விடுமுறையாதலால் இவர் எங்களுடன் வருவதற்கு வாய்ப் பாக இருந்தது. ஆக, பயணத்தில் கலந்து கொண்டவர் களின் தொகை பதினொன்றாக உயர்ந்தது.

எங்கெங்கு செல்வது, எப்படிச் செல்வது என்ற விவரங் களை எங்கள் குடும்ப நண்பராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்த திரு. கே. எஸ் முத்துவேல்பிள்ளையவர்களைக் (Ceylon Labour Commission Agent) sawfig &LLuči. (9 உறுதிப் படுத்திக் கொண்டோம். திரு பிள்ளையவர்கள் சிவ பக்தர். நியம நிட்டைகளை அதுட்டிப்பவர். திருநெல் வேலிச் சீமைப் பக்கம் பல்லாண்டுகள் பணியாற்றித் துறையூருக்கு வந்து சேர்ந்தவர், காட்டுப்புத்துனர் இவரது சொந்த ஊர். பள்ளி நிகழ்ச்சிகளில் இவரைப் பயன்படுத்திக் கொண்டதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். இவர் போட்டுத் தந்த திட்டப்படி இராமேச்சரம், மதுரை (திருப் பரங்குன்றம், அழகர் கோயில்), திருநெல்வேலி (குறுக்குத் துறை, நெல்லையப்பர் கோயில்), சிரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்துரர், வானமாமலை, கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகர்கோயில், திருவனந்தபுரம், கோயம்புத்துரர் (பேரூர்), பழநி, திருவண்ணாமலை, திருப்பதி, திருத்தணி, சென்னை, திருவரங்கம்-என்ற வரிசை முறையில் தலச் சேவை செய்வதென முடிவு கட்டினோம். இருப்பூர்திக்-கால அட்டவணையை வைத்துக்கொண்டு திட்டமிடப்பெற்ற தால் பயணம் பற்றிய விவரங்கள் அற்றுபடியாக இருந்தன.

பள்ளி மாணவர்களை மேல்வகுப்புகளுக்கு மாற்றும் வேலை பள்ளி ஆண்டு வரவு-செலவுத் தணிக்கை இவற்றை முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். பத்து பேருக்கும் சலுகை முறையில் பயணச்சீட்டுகள் வாங்கிக் கொண்டோம். சுமார் 40 நாட்கள் பயணமாதலால் ஒரு முட்டை அரிசி, அதற்கு வேண்டிய பருப்பு முதலிய மளிகை