பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 நினைவுக் குமிழிகள்-2

சாமான்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டோம், 1948 ஆண்டில் உணவு பங்கீட்டு முறை நடைமுறையிலிருந்ததால் நல்ல உணவு கிடைக்காதென்றும், 40 நாட்கள் கடை உணவு உட்கொண்டால் உடல் நிலை கெடும் என்றும் கருதி இந்த ஏற்பாடு செய்து கொண்டோம். திருச்சியிலிருந்து புறப்படும் இரும்பூர்தி வண்டியில் கிளம்பி அன்று மாலையே இராமநாத புரம் வந்தடைந்தோம்.

இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில் இறங்கி ஒரு சத்திரத்தில் தங்கவும் உணவு தயாரிக்கவும் ஏற்பாடு செய்து கொண்டோம். இங்கிருந்து 5 கல் தொலைவிலுள்ள தேவி பட்டணம் சென்றோம். இது நவபாஷாணம்’ என்றும் வழங்கப்படுகின்றது. பேருந்து வசதி இருந்தது. நாங்களே சென்று அங்குள்ள ஒருவர் உதவியால் சங்கல்பம் செய்து திரும்பினோம். இராமபிரான் இங்குதான் நவக்கிரக வழி பாடு செய்ததாக செவிவழிச் செய்தியால் அறிந்தோம், பகலுணவு கொண்டு மாலை இராமநாதபுர அரசர் அரண் மனை, தாயுமானவர் சமாதி முதலிய இடங்கட்குச் சென்று திரும்பினோம். இரவில் சத்திரத்தில் தங்கல். இங்கு சுகாதார வசதி குறைவு, கிணற்றில் நீர் இறைத்துத்தான் நீராடவேண்டும்.

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து பேருந்துமூலம் 'திருப் புல்லாணி சென்றோம். புல்லணை என்ற பெயர் தான் "புல்லாணி’ என மருவி வழங்குகின்றது. இஃது இராமநாதபுரத்திலிருந்து தென் திசையில் கீழக்கரை செல்லும் வழியில் ஏழுகல் தொலைவிலுள்ள ஊர். ஆழ்வார் களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங் களில் இதுவும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்தது. இந்தத் திவ்விய தேசத்தில் இராம