பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் - இராமேச்சரம் 297

பிரான் வானர சேனையுடன் இலங்கை செல்லச்சேது கட்டத் தீர்மானம் ஆனதால் இத்தலம் 'ஆதி சேது என்றும் வழங்கப் பெறுகின்றது, இன்றும் இத்தீர்த்தத் துறையில் மூழ்குவோர் ஸ்ேதுமூலே புல்லாரண்ய rேத்திரே என்று சங்கல்பம் செய்து கொள்ளும் வழக்கு உண்மையால் இஃது உறுதிப் படுகின்றது. மேலும், இன்றும் கன்னியாகுமரி ஆதிசேதுவாகவும், தனுஷ்கோடி மத்திய சேதுவாகவும், கோடிக்கரை அந்த சேதுவாகவும் மக்களால் கருதப் பெறுவதைக் கேட்டறியலாம்.

எய்த யோசனை ஈண்டொரு நூறிவை அய்யி ரண்டின் அகலம் அடைந்திடச் செய்த தால் அணை என்றிது செப்பினார் வைய நாதன் சரணம் வணங்கியே’ என்ற கம்பநாடனின் திருவாக்கின்படி நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் உடையதாக இராம சேது கட்டப்பட்டதாகத் தெரிவதால் குமரி தனுஷ்கோடி எண்பது கல் அகலமுள்ள சேதுவால் இணைக்கப் பெற்று ஏறக் குறைய ஒன்றாக இருந்ததென்று கொள்ளினும் அமையும். 70 வெள்ளங் கொண்ட வானர சேனை சென்ற வழி இவ்வளவு அகல முள்ளதாக இருக்க வேண்டுமல்லவா? வீடணனின் யோசனைப்படி கடல் கடக்க வருணனை வழியமைத்துத் தருமாறு தருப்பையைச் சயனமாக்கி

2. யுத்த சேதுபந்தனம்-71

3. இராமசேதுவைக் கன்னியாகுமரிக் குரியதாகக் கூறும் வழக்கும் உண்டு. இன்றும் குமரித்துறையில் நீராடுவோர் ஆதியேதோ : கன்னியாகுமரி, கேத் திர மாது பிதுர்திர்த்தே என்று சங்கல்பம் செய்து கொள்ளும் வழக்கும் உண்டு, கன்னியாகுமரித் தல புராணமும் இதனையே கூறுகின்றது.