பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 நினைவுக் குமிழிகள்-2

அதிலமர்ந்த வண்ணம் ஏழு நாளளவும் " இராமன் தவக் கோலத்திலிருந்த இடம்தான் புல்லணை இது வடமொழியில் 'தருப்பசயனம்’ என வழங்கலாயிற்று. "புல்லணை என்பது அதற்கு ஏற்ற தமிழ்ப் பெயர். இந்த வரலாற்றைக் கம்ப நாடனின்,

தருண மங்கையை மீட்பது

ஒர்நெறி தருக என்னும் பொருள்ந யந்துநல் நூல்நெறி

அடுக்கிய புல்லில் கருணை அம்கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி"

(தருண மங்கை-இளம் பருவத்தை யுடைய சீதாப் பிராட்டி; புல்-தருப்பை'; கருணை அம்கடல் -இராமபிரான்)

என்ற பாடலால் அறியலாம்.

கால் நடையில் கோடிக்கரை சென்று கடலில் நீராடிச் சங்கல்பம் செய்து கொண்டு திரும்பினோம். இங்கு நீராடுவது அபாயம். கடலில் அதிக அலை உண்டு. அலைகள் உயரமாக வீசும்போது கடலில் 'இராமசேது தெரிவதாக மக்கள் நம்புகின்றார்கள். நம்பிக்கையில் ஆராய்ச்சிப் பார்வை கூடாது என்பது என் கருத்து. ஊரிலுள்ள திருக் கோயிலின் பிராகாரத்தில் இராமபிராமன் புல்லணை மீது

4. யுத்த, வருணனை வழி-6. 5. யுத்த வருணனை வழி-5