பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நினைவுக் குமிழிகள்-2

இனிமையான பேச்சால் எவரையும் ஈர்த்து விடுவார். சாத்திர ஞானம் இவரிடம் நிறைய இருந்தது. வட மொழியில் மந்திரம் ஒதி, அதைத் தமிழிலும் பெயர்ந்து இசையுடன் சொல்லிய முறை என் உள்ளத்தைக் கவர்ந்தது. எங்களை உணர்ச்சி வசப்படுமாறு செய்துவிட்டார். மாலை 4 மணிக்குக் கொலுவில் வைக்கப் பெற்றிருந்த இரண்டு நாகர் சிலைகளையும் மேளதாளத்துடன் சுமார் 50 கெஜத் தொலைவிலுள்ள ஒரு தோட்டத்திற்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்தோம். நாங்கள் கும்பலாகச் சென்ற போது எதிரில் ஒருவர் பால்குடத்துடன் காணப் பெற்றார். 'இது நல்ல சகுனம்' என்றார் சாஸ்திரிகள் (இது முன்னேற் பாடாக இருக்குமோ என்பது என் ஐயம்). முதல் நாள் நிகழ்ச்சி மிகச் செவ்வனே நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி சர்ப்ப சாந்தி, இந்த நிகழ்ச்சி ஊருக்குப் புறம்பே ஒரு ஃபர்லாங் தொலைவில் ஒர் இலுப்பைத் தோப்பில் நடைபெற்றது. இங்கும் ஒரு ஹோமகுண்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. கோதுமை மாவினால் பல்வேறு நாக உருவங்கள் செய்யப் பெற்றிருந்தன. இங்கும் இரு தம்பதிகளையும் அமரச் செய்து ஹோமம் வளர்த்து மந்திரங்களை ஒதினார். நாக உருவங்கள் ஹோமகுண்டத்தில் மந்திரங்களுடன் போடப் பெற்று தகனம் செய்யப் பெற்றன. இந்த நிகழ்ச்சியும் மிக உருக்கமாக நடைபெற்றது. நாங்கள் உணர்ச்சியால் எங்களை மறந்தோம்.

மூன்றாம் நாள் தீர்த்தமாடல். இராமதீர்த்தம், அநும தீர்த்தம், சுக்கிரீவ தீர்த்தம், சடாயு தீர்த்தம் முதலிய ஐம்பதிற்கும் மேற்பட்ட தீர்த்தங்கள். பெரும்பாலும் தீர்த்தங்களில் நீர் இருப்பதில்லை, தீர்த்தக் கரையில்