பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் - இராமேச்சரம் 351

பெயர்ப்பலகைகள்தாம் இருக்கும், ஊருக்கு வெளியில்தான் இவை இருந்தன. சுமார் 2 கல் தொலைவுச் சுற்றில் இவை அமைந்திருந்தன. ஒரே ஒரு தீர்த்தம் தெப்பக் குளமாக இருந்தது. அதில் மூழ்கி நீந்த முடிந்தது. திருக்கோவிலுக்குள் இரண்டு தீர்த்தங்கள் இருந்தன. வாளி.கயிற்றினால் இறைத்து ஊற்றிக்கொள்ள வேண்டும். நீர் வெளியேறு வதற்கு வழிசெய்திருந்தார்கள். மூலத்தானத்திற்கு அருகி விருப்பது கோடி தீர்த்தம்'. இதிலும் நீராடவேண்டும். இதன் நீரைத்தான் செப்புப் பாத்திரங்களில் அடைத்து ஊருக்கு எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது.

இறுதியாக நாங்கள் வந்தது அக்கினி தீர்த்தம். திருக் கோயிலுக்குத் தெனபுறம் உள்ள ஆழமும் அலையும் அதிக மில்லாத கடல். இஃது ஒரு சிறிய வளைகுடாபோல் ஒதுக்குப்புறமாக இருப்பதால் மக்கள் அச்சமின்றி இதில் நீராடலாம்.

மொய்யார் தடம்பொய்கை

புக்கு முகேரென்னக் கையால் குடைந்து

குடைந்துன் கழல்பாடி.." (மொய் - மொய்க்கின்ற; தடம் பொய்கை

விசாலமான குளம்; கழல் - திருவடி)

என்று மணிவாசகப் பெருமான் கூறியுள்ளவாறு பூம்புனல் பாய்ந்து நீராடலாம். வடநாட்டிலிருந்து பல நாட்கள் நீராடாமல் அழுக்குடம்புடன் வரும் திருத்தலப் பணிகள் இதில் நீராடும்போது தங்கள் உடலிலுள்ள அழுக்கு முழுதும் நீங்கி நிர்மலமாக, ஒளியுடன் கூடிய திருமேனியைப் பெற

7. திருவெம்பாவை-11.