பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30? நினைவுக் குமிழிகள்-2

முடியும். அவர்கள் இங்கனம் பெறும் அநுபவத்தை நேரில் கண்டு அநுபவித்தேன். அதிகாலையில் 5 மணிக்குத் தொடங்கும் தீர்த்த யாத்திரை’ சுமார் பத்து அல்லது பதினொரு மணிக்கு முடியும். அக்கினி தீர்த்தத்துக்குப் போகும் வழியில்தான் சங்கர மடங்கள், மத்வ மடங்கள், வேறு பல மடங்கள் அமைந்துள்ளன.

இரண்டாம் நாள் மாலையில் 'கந்தமாதன பருவதம்’ சென்று சுகமான காற்றை நுகர்ந்தோம். இங்கிருந்து நாற் புறமும் நோக்கினால் தொலைவிலுள்ள காட்சிகளைக் கண்டு அநுபவிக்கலாம். ஒருபுறம் மட்டக் குதிரைகள் பண்ணை’ ஒன்று உள்ளது. யார் பராமரிப்புமின்றி குதிரைகள் குட்டி கள் போடுகின்றன; தாமாக வளர்கின்றன. குட்டிகளைப் பிடிப்பது கடினல், வேருவி வெருவியோடுவதால் இவற்றைப் பிடிக்க முடிவதில்லை. சாமர்த்தியமாகப் பிடிப்பவர்கள் ரூ. 100, ரூ. 200!. என்று விலைக்கு விற்கலாம். வண்டி இழுப்பதற்கு உகந்தவை. ஆதலால் குதிரை வண்டிக்காரர் கள் இவற்றை வாங்கிப் பழக்குகின்றனர். சிறிய குதிரை களாக இருப்பதால் தீனிக்கு அதிகச் செலவு ஏற்படுவதில்லை. மண்டபத்திலிருந்து இராமேச்சரம் செல்லும் இருப்பூர்தி வழியில் தங்கச்சி மடம்' என்ற நிலையத்தருகில்தான் இக் குதிரை வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெறுவதாகச் சொல்லுகின்றனர்.

தனுஷ்கோடி : மூன்றாம் நாள் இங்குச் சென்றோம். அக்காலத்தில் இராமேச்சரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு இருப்பூர்தி வண்டி இருந்தது; ஆனால் இப்போது இல்லை காலையில் 5 மணிக்கு இராமேச்சரத்திலிருந்து கிளம்பும், மாலை 3 மணிக்கு தனுஷ்கோடியிலிருந்து திரும்பும், நாங்கள் அதிகாலை 5 மணிக்குப் படகில் சென்றோம் (12 கல்