பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் மதுர்ை 303

தொலை); 7 மணிக்குத் தனுஷ்கோடியை அடைந்து 2 மணி நேரத்தில் சங்கல்பத்தை முடித்துக் கொண்டு 10 மணிக்கு இருப்பிடத்தை அடைந்தோம். திரு. ரங்கப்ப ஆச்சார் எங்க ளுடன் வந்து சங்கல்பம் செய்து வைத்தார். பாவம், இவருக்கு மக்கட்பேறு இல்லை! இராமாசாஸ்திரிகன் என்பவர் பேர் பெற்றவர்; மிகவும் இளைஞர். பரம்பரையாக திருத்தலப் பயணிகளுக்கு வேண்டுவன செய்து இத் தொழிலைப் பிழைப்பாகவே நடத்தி வருகின்றார். இவருக்கு உதவியாக ரங்கப்ப ஆச்சார் பணி செய்து வந்தனர். இவர்தம் மாத ஊதியம் ரூ. 100 லிருந்து ரூ. 200/- வரை இருந்தது. எங்களுடன் எங்கட்குத் துணையாக வந்த சுப்பை யர்தான் ரங்கப்ப ஆச்சாரைத் தேர்ந்தெடுத்தார். இராமா சாஸ்திரிகளுக்கு ரூ. 500/-ரும் ரங்கப்ப ஆச்சாருக்கு ரூ.50/-ரும் தந்ததாக நினைவு. தனுஷ்கோடியிலிருந்து திரும்பியதும் விரைவாக உணவு உண்டு பகல் 12 மணிக்கு கோவைவிரைவு இருப்பூர்தியில் ஏறி மாலை 4 மணிக்கு மதுரை வந்தடைந்தோம்.

குமிழி-99 35. திருத்தலப் பயணம்-மதுரை

மதுரையை வந்தடைந்ததும் மங்கம்மாள் சத்திரத்தில் இடவசதிக்கு முயன்றோம்; கிடைக்கவில்லை. அந்தச் சாலை யிலேயே சத்திரத்திற்கு அரை ஃபர்லாங் தொலைவில் நாளொன்றுக்குப் பத்து ரூபாய் வாடகையில் தனியார் பொறுப்பிலுள்ள ஒர் இடம் பிடித்தோம். உணவு சமைப் பதற்கும் நீராடவும் வசதியாகத்தான் இருந்தது. இரவில் படுப்பதற்கு வசதி இல்லை. பெண்களை வீட்டிற்குள்ளே தங்க வைத்துவிட்டு ஆண்கள் மட்டிலும் காற்றோட்டமாக வெளியில் தாழ்வாரத்தில் தங்கினோம்.