பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-மதுரை 305

(துடங்குதல் அசைதல் கூடல் - மதுரை, நெடியோன் -

முருகன்;

என்ற எருக்காட்டுத் தாயங் கண்ணனாரின் பாடற் பகுதி யாலும் அறியலாம். இங்குத்தான் திருமுருகாற்றுப்படை என்ற பாட்டு எழுந்தது. நக்கீரர் வாழ்க்கையில் மதுரையில் "தமிழுக்குப் பொற்கிழியளித்த வரலாறும், பரங்குன்றத்தில் 'திருமுருகாற்றுப்படை தோன்றிய வரலாறும், அவரது கயிலைப்பயணத்தில் கயிலை பாதி அந்தாதி, காளத்தி பாதி அந்தாதி பிறந்த கதையும் மூன்று இலக்கிய வரலாற்று மைல் கற்களாக அமைந்துள்ளன. திருப்பரங்குன்றத்தின் இயற்கையழகுகனையும், பக்தி காட்டிய முருகனது பேரழ கினையும் துய்த்துத் தன்னை இழந்த நிலையிலுள்ள ஒருவரின் இதயத்தில் தோன்றிய பகற் கனவுதான் திரு முருகாற்றுப் படையை நக்கீரர் பாடிய வரலாறாக விளைத் திருக்க வேண்டும். திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு முதலிய சங்க நூல்களாலும் தேவாரம் பாடிய சைவசமய குரவர்களாகிய தாவுக்கரசர் ஞானசம்பந்தர் ஆகிய இருவர் பாடல்களாலும், பிற்காலத்தில் அருணகிரி நாதர் போன்ற ஆன்றோர் வாக்கினாலும் புகழப்பெறும் திருப்பரங் குன்றத்தின் தெய்வப் பெருமையை, நாடோடிக் கதைகளாக வழங்கியவற்றுடன் சேர்த்துக் குழைத்து அருளு கின்றார் கிரம்ப அழகிய தேசிகர் தம் திருங்கி புராணத்தில், பரிபாடலில் காணப்பெறும் தெளிவான வருணனை திருமுருகாற்றுப்படையில் காணப்பெறவில்லை. இந்தச் சிந்தனைகள் திருப்பரங்குன்றத்தில் இருந்தபோது என் மனத்தில் எழுந்தன.

இங்குத்தான் இந்திரன் தன் மகள் தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுத்த வரலாறு கந்த

நி-20