பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-மதுரை 309

திருமாவி ருஞ்சோலை

மலை என்றேன்; என்ன,

திருமால்வந் தென்நெஞ்சு

நிறையப் புகுந்தான்."

என்ற திருப்பேர் நகர்ப் பாசுரத்தின் முதல் இரண்டு அடிகளைச் சிந்திக்கின்றோம். நம்மாழ்வார் கொக்கு மலை, குருவி மலை, கழுத மலை என்ற பல மலைகளையும் சொல்லிப் போகிற போக்கில் திருமாலிருஞ்சோலை மலை' என்ற மலையின் பெயர் யாத்ருசிகமாக வெளிவருகின்றது. ஏனைய மலைகளைவிட இம்மலைக்கு ஒரு சிறப்பு உண்டு என்ற அறிவுடன் சொன்னாரல்லர். இதனையே பற்றாசாகக் கொண்டு எம்பெருமான் பெரிய பிராட்டியாருடன் கூட வந்து அவர் நெஞ்சு நிறையப் புகுந்து கொள்ளுகின்றான். நினையாது சொன்னவற்றையும் நினைத்துச் சொன்னதாகக் கொடுக்க வல்லவளான பிராட்டி அருகில் இருப்பதனால் மலையைப் பற்றின ஆழ்வாரின் வாக்கு எம்பெருமானுக்கு மலையாகவே (பெரிதாகவே) ஆய்விடுகின்றது. எம்பெருமா னுக்கு நீர் வண்ணன்'என்றொரு திருநாமமும் உண்டல்லவா? மிகச் சிறு துவாரம் இருப்பினும் நீர் உள்ளே புகுந்து நிறைந்து விடுவதைப் போலவே நீர் வண்ணனான எம்பெருமானும் ஆழ்வார் மனத்துள் புகுவதற்குத் திருமாலிருஞ்சோலை மலை என்று நினையாது சொன்ன உத்தி மாத்திரமே அவருள் புகுவதற்குரிய சிறிய துவாரமாக அமைந்து விட்ட அதிசயத்தை நினைந்து போற்றுகின்றோம்.

நாங்கள் சென்ற குதிரை வண்டி திருக்கோயிலுக்கு முன்னதாகவுள்ள ஒரு பெரிய சோலையை வந்தடைகின்றது.

5. திருவாய். 10.8:1 6. யாத்ருசிகம் - யாரோ ஒருவருடைய இச்சையில்

உண்டாவது: :