பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தவப் பயணம்-மதுரை 313

திருக்கோயிலின் வடக்குச் சுற்றில் ஆண்டாள் சந்நிதி உள்ளது. அங்கும் சென்று அவருடைய போருளைப் பெறு கின்றோம். அவர் சந்நிதியில் 'சிந்துணரப் பொடி’ (நாச்.திரு.9) என்ற நாச்சியார் திருமொழியை ஒதி உளங்கரைகின்றோம். அடியற்காணும் பாசுரத்தை (6) இருமுறை ஒதுகின்றோம்.

நாறு நறும்பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்குதான் நூறு தடாவில் வெண்ணெய்வாய்

நேர்ந்து பராவிவைத்தேன் நூறு தடா நிறைந்த

அக்காரவடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று

வந்திவை கொள்ளுங்கொலோ' (நாறும்-மணங் கமழும்; வாய்நேர்ந்து-வாயாலே சொல்லி, பராவி-சமர்ப்பித்து; சொன்னேன்வாயால் சொன்னேன்; இப்பாசுரத்தைப் பற்றி ஓர் இதிகாசம் உண்டு. அதையும் சிந்திக்கின்றோம். எம்பெருமானார் நாச்சியார் திருமொழி காலட்சேபம் நடத்தும்பொழுது இப்பாசுரம் அளவில் வருங்கால் ஆண்டாளுடைய எண்ணம் வாய்ச்சொல் அளவில் சென்றதேயொழிய, செயற்படவில்லை. அதனை நாம் தலைக்கட்ட வேண்டும்’ என்று கருதி அப்பொழுதே புறப்பட்டுத் திருமாலிருஞ்சோலை மலைக்கு எழுந்தருளி நூறுதடா நிறைந்த வெண்ணெயும், நூறுதடா நிறைந்த அக்கார அடிகிலும் அழகருக்கு அமுது செய்வித்தருளினார் என்றும், அதன் பின்னர் அப்படியே சிரீவில்லிபுத்துர் ஏற எழுந்தருளி ஆண்டாளை அடிவணங்கி நின்றனர் என்றும், அப்பிராட்டியும் தன் நினைவறிந்து இவர் நிறைவேற்றிய

10. நாச், திரு. 9:6