பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 நினைவுக் குமிழிகள்-2

செயலுக்கு மனமுவந்து "நம் அண்ணரே!” என்று சொல்லி அர்ச்சாவதார சமாதியைக் கடந்து தழுவிக் கொண்டாள் என்றும் பெரியோர் பணிக்கும் வரலாற்றையும் எண்ணி மகிழ்கின்றோம். அன்று மு. த ல் இராமாநுசருக்குக் *கோயில் அண்ணன்' என்ற திருநாமும் ஏற்பட்டது, இதுவும் நம் நினைவிற்கு வருகின்றது.

இன்னோர் இதிகாசத்தையும் நம்மனம் குமிழியிடுகின்றது. நஞ்சீயர் சந்நிதியில் நம்பிள்ளை, ஒரு பூர்ண கும்பத்துக்கும் அதிகப் படியானவற்றை விரும்பாத எம்பெருமான் விஷயத் தில் நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும் சமர்ப்பிக்க வேண்டுமோ? என்று வினவ, அதற்குச் சீயர், 'திருவாய்ப்பாடியின் செல்வத் திற்கு இஃதெல்லாம் கூடினாலும் ஒரு பூர்ணகும்பத்துக்குப் போராது காணும்! என்று அருளிச் செய்தாராம். இந்த இதிகாசம் நம்மைப் பரவசப்படுத்துகின்றது.

முற்பகல் சுமார் பதினொரு மணிக்குச் சேவையை முடித்துக் கொண்டு வந்த குதிரை வண்டியிலேயே நம் இருப் பிடம் திரும்புகின்றோம். பகலுணவு கொண்டபின் உண்ட களைப்பும் தொண்டனுக்கும் .ண்டு என்ற உண்மையை உணர்கின்றோம். புதுமண்டபத்தையும் கடை வீதியையும் சுற்றிப் பார்த்தவர்களும் வந்து சேர்ந்து உணவு கொள்ளு கின்றனர். அன்று பிற்பகல் எல்லோருக்குமே ஒய்வு. அன்றிரவே முட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு திருநெல்வேவியை நோக்கிப் புறப்பட்டோம். கோடைக் காலத்தில் கடுமையான பயணம் இது என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்தோம். நாங்கள் கொண்டு வந்த அரிசியில் பாதியைப் பிரித்து முட்டை கட்டி மதுரையில் தெரிந்த இடத்தில் ஒருவரிடம் தந்து திரும்பவும் மதுரைக்கு வரும் போது எடுத்துக் கொள்வதாகச் சொன்னோம். அவரும் “சரி” என்று வாங்கி வைத்துக் கொண்டார்.