பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் - 9

தொடக்கக் காலத்தில் நான் சேர்ந்த அன்றே ஒரு தமிழாசிரியரும் வந்து சேர்ந்தார். துறையூருக்கு அண்மையி லுள்ள சிக்கத்தம்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் இவர்; வீ.சி. கிருட்டினசாமி என்பது இவர்தம் நற்பெயர். தொடக் கத்தில் முறையான படிப்பின்றி இருபது வயதிற்குமேல் திருவையாறு சென்று அரசர் கல்லூரியில் ஐந்தாண்டுகள் படித்து வித்துவான் பட்டம் பெற்றவர். நல்ல புலமை யுடையவர்; பாட்டியற்றும் ஆற்றலுடையவர். இவர் தமிழாசிரியர் பயிற்சியும் பெற்றிருந்தார். கோவைக்கருகி லுள்ள பெரியநாய்க்கன் பாளையத்தில் இராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப்பள்ளியில் (திரு.தி.சு. அவனாசிலிங்கம் அவர்களின் நிர்வாகத்தின்கீழ் இருந்தது.) பணியாற்றி வந்தார்; அங்கும் குறைந்த ஊதியம். தம்மூருக்கருகிலுள்ள பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தாலும், நான்வந்து சேருமாறு வற்புத்தி எழுதினமையாலும் இங்கு வந்து பணியேற்றார். ஆக முதலாண்டில் ஐந்துபேர்களை ஆசிரியர்களாகக் கொண்டு நடுநிலைப்பள்ளி மிகச் சிறப்பாக இயங்கியது.

நான் பள்ளியில் தலைமையாசிரியனாகப் பதவியேற்ற ஒன்றிரண்டு நாட்களில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. அதையும் ஈண்டுக் குறிப்பிடுவேன். அதற்கு அடிப்படையாக இருந்த ஒன்றையும் குறிப்பிடுவது மிகவும் இன்றியமையாததாகின்றது. சிறு வயதில் பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயர் சுப்புரெட்டி என்பது. பெரகம்பியில் நான் திண்ணைப் பள்ளியில் பயின்ற காலத்தில் என்னுடன் போஜரெட்டி, நல்லப்பரெட்டி, பாப்புரெட்டி முத்துரெட்டி என்ற பெயர்களையுடைய மாணாக்கர்கள் நால்வர் பயின்றனர். என் பெயரையே கொண்ட சிறுவன் ஒருவனும் வந்து சேர்ந்தான். அப்போது என்