பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நினைவுக் குமிழிகள்-2

பிள்ளை தெரிவித்திருந்தார். காலையும் மாலையும் சுமார், 6 மணிக்குப் பலர் வந்து சேவித்துப் போதலைக் கண்டோம், நாங்களும் முருகனைச் சேவித்தோம். பக்தர்கள் வந்து வந்து போவதைக் கண்டு மகிழ்ந்தோம். நெல்லையம்பதியில் எங்கு பார்த்தாலும் நெற்றியில் திருநீற்றுப் பொலிவுடன் பக்தர்கள் தென்படுவார்கள். சிவ வழிபாடும் முருக வழி பாடும் பெருவழக்காக இருப்பதை நெல்லையம்பதியில் கண்டு மகிழலாம். நம்மை யறியாமல் நம்மிடம் பக்தி கிளர்ந்தெழு வதையும் உணரமுடிந்தது. நானும் சாலைக்குமரனை,

..................யாஅம்இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே.” என்று கடுவன் இளவெயினனார் வேண்டுவதையே வேண்டி னேன்.

செவ்வேள் சேவையை முடித்துக் கொண்டு இராம கிருஷ்ண ரெட்டி யார் துணிக்கடையை விசாரித்துக் கொண்டு அவரிடம் சென்றோம். ஒர் அரைமணி நேரம் பேசிக் கொண் டிருந்துவிட்டுத் திருநெல்வேலிசந்திப்புப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் எத்தனையோ பேர் சட்டம் படித்துவிட்டு வக்கீல் தொழிலில் ஈடுபடாமல் பிறதொழில்களில் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிந்தது. திரு. இராமகிருஷ்ண ரெட்டியார் அவர்களும் இதையே குறிப் பிட்டுச் சொன்னார்கள், நானும் திரு. ரா. பி. சேதுப்பிள்ளை, திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை. திரு. கோ. சுப்பிரமணியப் பிள்ளை, திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திரு. எஸ். சோமசுந்தர பாரதியார்

2. பரிபாடல்-5. வரி 78-81,