பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-நெல்லை 319

போல இங்கும் அன்னை காந்திமதியை வணங்கிய பின்னர் தான் வேணுவனகாதர் என்ற கெல்லையப்புரை வணங்க வேண்டும். இந்தக் கோயில் இன்றிருக்கும் இடம் அந்தக் காலத்தில் ஒரு மூங்கில் காடாக இருந்தது. ຂົກຕໍ່ຂໍGsສສ என்ற இடையன் ஒருவன் நாடோறும் தன் மாட்டுப்பட்டிக் குச் சென்று பால் கறந்து பால் நிறைந்த குடத்துடன் வீடு திரும்பும்போது கால்தடுக்கி விழுத்து பால் வீணாவதாக இருந்தது. ஒருநாள் ஒரு கோடரியுடன் வந்து மூங்கிற் புதரை வெட்டி அகற்ற முனைந்தபோது வெளிப்பட்டவரே வேணுவன நாதர் (வேணுவனம் . மூங்கில் வனம்). இவரே கருவறையில் வெட்டுப்பட்ட தலையுடன் சேவை சாதிக் கின்றார். வேதசர்மா என்ற பெயர் கொண்ட அர்ச்சகர் ஒருவர் கோயில் பூசைக்கு வேண்டிய நெல்லை எடுத்துத் தம் வீட்டின் முற்றத்தில் வெயிலில் உலர்த்திவிட்டு நீராடச் சென்றிருந்தபோது பெருமழை பெய்தது. கவலையுடன் அர்ச்சகர் வீட்டிற்கு விரைந்தபோது அந்த நெல் காய்ந்த இடத்தில் ஒருதுளி மழையும் விழா திருப்பதைக் கண்டு வியத் தார் அர்ச்சகர். நெல்லை வேலிபோல் நின்று காத்ததன் காரணமாக இறைவன் கெல்வேலிகாதன் ஆகின்றார். ஊரைச் சுற்றி நெல்வயல்கள் பரந்திருப்பதால் ஊரும் நெல்வேலி' என்ற பெயரைப் பெறுகின்றது.

காந்தமதி - நெல்லையப்பரைப்பற்றி ஒரு சிறிய கதையும் உண்டு வறிஞன் ஒருவன் நெல்லையப்பரைப் பல நாள் வணங்கியும் அவனுக்கு இறைவன் செவி சாய்க்கவில்லை. ஒருநாள் காந்திமதியின் சந்நிதிக்கு வந்து தன் விண்ணப் பத்தை அன்னையின் மூலமாக அப்பனுக்குச் சமர்ப்பிக் கின்றான். வைணவத்தில் பெரிய பிராட்டியார் புருஷ கார பூதையாகப் பொலிவதைப்போல் இவளும் பொலிவாள்

3. புருஷகாரம் - சேர்ப்பிக்குந் தன்மை; புருஷ கார

பூதை - சேர்ப்பிப்பவள். с