பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 நினைவுக் குமிழிகள்-2

என்றுவறிஞன் நம்புகின்றான். அவனது வறுமையும் நீங்கிவிடு கின்றது. இந்ததிகழ்ச்சியைக் கவிஞன் ஒருவன் வடித்துத் தந்த,

ஆய்முத்தப் பந்தரில் மெல்லணை

மீது உன், அருகிருந்து 'நீமுத்தம் தா'என்று அவர் கொஞ்சும்

வேளையில், நித்தநித்தம் வேய்முத்த ரோடுஎன் குறைகள் எல்லாம்

மெல்லமெல்லச் சொன்னால் வாய்முத்தம் சிந்தி விடுமோ?

நெல்வேலி வடிவு.அன்னையே!

-தனிப்பாடல் என்ற பாடலை நினைவு கூர்ந்த வண்ணம் அன்னை காந்தி மதியை வணங்குகின்றோம்; அடுத்து நெல்லையப்பரையும் சேவிக்கின்றோம்.

நடாரசாரின் ஐந்து சபைகளுள் இங்குள்ளது தர்மிரசபை. சுவாமி சந்நிதிக்கெதிரில் ஏழிசை ஒலி எழும்பும் கருங்கல் தூண்கள் உள்ளன. இந்த ஒலியை ஒரு சிறு கோலால் தூண் களைத் தட்டிக்கேட்டு மகிழலாம். இக்கோயிலின் சிற்பங்கள் மிகவும் புகழ் பெற்றவை; நாய்க்கர் காலத்துச் சிற்பங்கள்தாம் அதிகம் உள்ளன. திருக்கோயில் ஐந்து கோபுரங்களுடன் திகழ்கின்றது. இத்திருத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பாடல் மட்டிலும் உண்டு. வழிபாட்டை முடித்துக் கொண்டு இருப் பிடம் திரும்புகின்றோம், உணவு கொண்டு இரவு உணவுக்கும் வழி செய்துவிட்டுச் சமையல்காரத் தம்புவையும் கூட்டிக் கொண்டு ஆழ்வார் திருநகரி சிரீவைகுண்டம் திருச்செந்தூர் போய் வரத்திட்டமிட்டோம்.

ஆதிகாதப் பெருமாள் 1 திருநெல்வேலிக்கும் திருச்செந் துருக்கும் இருப்பூர்தி வண்டி உண்டு. அதில் ஏறி ஆழ்வார் திருநகரி நிலையத்தில் இறங்கி இவ்வூருக்குள் சிறிது