பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 நினைவுக் குமிழிகள்-2

வழங்கி வருகின்றது. வைணவர்கள் இதனைத் திருப்புளி யாழ்வார்’ என்றே வழங்குவார்கள். இதன் அடியில் ஆழ்வார் தனிக்கோயிலில் சிலை வடிவில் காட்சித் தருகின்றார்!

இவரை வணங்குகின்றோம்.

இத்திவ்விய தேசத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன் இன்னொரு செய்தியையும் அறிகின்றோம். தண்பொருநை யாற்றின் வடகரையில் காந்தீச்சுவரம்' என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது. இங்குக் கரூர்சித்தர் என்ற ஒரு பெரியார் இருந்ததாகவும் அவரிடம் நாய் ஒன்று இருந்ததாகவும், நாடோறும் அது திருக்குருகூர் தெருக்களில் விழும் எச்சில் உணவை அருந்தி வந்ததாகவும் தெரிந்து கொள்ளு கின்றோம். ஒரு நாள் அந்நாய் குருகூரிலிருந்து ஆற்றைக் கடந்து தன் இருப்பிடத்திற்குத் திரும்புங்கால் வெள்ளத்தின் நீர்ச்சுழலில் சிக்கி உயிர் இழந்ததாகவும், அப்பொழுது அதன் உயிர் ஒளிபெற்று மீளா உலகினை அடைந்ததாகவும், இதனைக் கண்ணுற்ற சித்தர் அழகான பாடல் ஒன்றினை அருளியதாகவும் அறிகின்றோம். -

வாய்க்கும் குருகைத் திருவீதி

எச்சிலை வாரி யுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்தநாயோடு இந்தப் பேய்க்கும் பலமளித் தால் பழுதோ?

பெருமாள் மகுடம் சாய்க்கும் படிகவி சொல்லும்

ஞானத் தமிழ்க்கடலே. என்பது அவர் பாடிய பா. இவரும் நம்மாழ்வாரைப்

பாடி அவர் திருவருேைப் பெற்றார். శేక్షి

சிரிவைகுண்டம் : திருநகரியிலிருந்து பேருந்து மூலம் சிரீவைகுண்டம் அடைகின்றோம். பரமபதத்திலுள்ள