பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நினைவுக் குமிழிகள்-2

பெயரைப் பற்றி எந்தவித எண்ணமும் எழவில்லை. திண்ணைப் பள்ளியில் இந்தப் பெயராலேயே அழைக்கப் பெற்றேன். கோட்டாத்துTர் வந்து தொடக்கப் பள்ளியில் சேர்ந்து நான்கைந்து ஆண்டுகள் பயின்றபோது கூட .சுப்பு ரெட்டி’ என்ற பெயர் என் மனத்தில் எந்தவித எண்ணத்தையும் எழுப்பவில்லை.

ஆனால் துறையூரில் உயர்நிலைத் தொடக்கப் பள்ளியில் சேரும்போது (1930-31) இப் பெயர் என் மனத்தை நெருடியது. வயது முதிர்ந்த கிழவன்’ என்பது போன்ற வளர்ச்சியை இப்பெயர் உண்டாக்குவதாக எண்ணினேன் என்னைப் பள்ளியில் சேர்க்க வந்த என் ஆசிரியப் பெருந்தச்ை வி. கே. அரங்க நாத அய்யரிடம் ரெட்டி’ என்ற சாதி குறிப்பை -பின்னொட்டை - முந்திரிக்கொட்டை போல நீட்டிக் காட்டும் பகுதியை - வெட்டி விடுமாறு வேண்டி னேன். அவரும் என் மனக்குமுறலை நன்கு உணர்ந்து ‘சுப்பு என்ற பெயரிலேயே என்னைப் பள்ளியில் சேர்த்து விட்டார். இந்தப் பெயர்தான் கல்லூரி வாழ்விலும் சைதை ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி வாழ்விலும் பெரு வழக்காக நின்று நான் பெற்ற சான்றிதழ்களிலெல்லாம் இடம் பெற்றுத் திகழ்கின்றது.

தொடக்கத்தில் ஒரு மூன்று திங்கள் குடும்பம் இன்றி பள்ளியிலேயே ஓர் அறையில் "மாணியோல் வாழும் நிலை ஏற்பட்டது. பள்ளி விட்டதும் நடராச அய்யர் விடுதியின் சிற்றுண்டிக்காக ஒருகல் தொலைவிலுள்ள ஊரைநோக்கி மிதி வண்டியில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பாகப் பல மாணாக்கர்கள் சென்று கொண்டிருந்தனர். எதிரில் ஓர் தொடக்க நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மிதி வண்டியில் வந்து கொண்டிருந்தார். நான் ஊருக்குப் புதிய வனாதலால் ஒன்றிரண்டு நாட்களில் ஊரார் என்னை