பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 நினைவுக் குமிழிகள்-2

என்பது முத்தப் பருவத்தில் உள்ள பாடல். பாடிய வாய் தேனுறச் செய்யும் செந்தமிழ்க்கணி.

எள்ளத் தனைவந் துறுபசிக்கும்

இரங்கிப் பரந்து சிறுபண்டி எக்கிக் குழைந்து மணித்துவர்வாய் இதழைக் குவித்து விரித்தழுது துள்ளித் துடித்துப் புடைபெயர்ந்து

தொட்டில் உதைந்து பெருவிரலைச் சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்

தோளின் மகரக் குழைதவழ மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்

விளைத்து மடியின் மீதிருந்து விம்மிப் பொருமி முகம்பார்த்து

வேண்டும் உமையாள் களபமுலை வள்ளத் தமுதுண்டு அகமகிழ்ந்த

மழலைச் சிறுவா வருகவே: வளருங் களபக் குரும்பை முலை

வள்ளிக் கண்வா! வருகவே!"

என்பது வாரானைப் பருவத்திலுள்ள இன்கனி. இந்த இரண்டு கணிகளையும் சுவைத்த நிலையில் முருகப்பெருமா னிடமிருந்து விடை பெறுகின்றோம்.

நாங்கள் இருப்பூர்தி நிலையத்திற்கு வரும்போது வண்டியும் தயாராக இருந்தது. அதில் ஏறி திருநெல்வேலியை அடைந்தோம். அடுத்த நாள் பயணத்திட்டத்தைப் பற்றிச் சிந்தித்தோம்.

7. டிெ. டிெ வாரானைப்பருவம்