பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி 327

  • - குமிழி-101 37. திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி

திண்பொருநையில் நீராடினோம்; பொருநையில் நீராடினால், வீடு திரும்புவதற்கே மனம் இராது. பளிங்கு போன்ற நீரில் நீராடும்போது உடல் தூய்மைப் படுவதுடன் நற்சிந்தனைகளும் மனத்தைப் பளிங்கு போலாக்குகின்றன. காலை உணவு உண்டு இரவுக்கும் தக்க முறையில் உணவு தயார் செய்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் பேருந்தில் குமரி முனையை நோக்கிப் புறப்படுகின்றோம். போகும் வழியில் வானமாமலைத் திருக்கோயில் சென்று வழிபட நினைக்கின்றோம். எங்கள் குழுவில் உள்ள ஒரு மூதாட்டி இத்திருக்கோயில் வழிபாட்டை வற்புறுத்தியதால் இத் திட்டம்.

வானமாமலை : இது சிரீவரமங்கை என்றும் வழங்கப் பெறும். நான்கு நேரி (நாங்குநேரி) என்பது பொதுமக்கள் வழங்கும் பெயர். இது திருநெல்வேலி-நாகர் கோயில் நெடுஞ்சாலையில் நெல்லைக்குத் தெற்கில் 19கல் தொலைவி லுள்ளது. இந்த ஊரில் நான்கு ஏரிகள் இருந்தமையால் ஊர் நான்குகேரி என்ற பெயரால் வழங்கியது. இப்பொழுது ஒரே ஒர் ஏரிதான் உள்ளது. இது திருக் கோயிலை அடுத்துள்ளது. ஆதியில் கோயிலின் கருவறையே குளத்திற்குள் இருந்திருக்க ளேண்டும் என்று சொல்லு கின்றனர். இன்றும் குளத்தில் நீர் நிறைந்திருக்கும்பொழுது கோயிலின் கருவறையைச் சுற்றி ஒன்றி ரண்டு அடி நீர் நிற்பதைக் காணலாம். இத்திருத்தலத்தில் திருக்கோயில், குளம், ஏரிக்கரையிலுள்ள மரங்கள் எல்லாம் பரமபத நாதனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். இந்தத்