பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 நினைவுக் குமிழிகள்-2

தில்விய தேசத்து எம்பெருமானை நம்மாழ்வார் மட்டிலும் மங்களாசாசனம் செய்துள்ளார், (திருவாய் 5.7) ஆழ்வார் பாசுரங்களில் ஊரின் பெயர் சிரீவரமங்கை என்றே காணப் பெறுகின்றது.

வண்டி பேருந்து நிலையத்தை அடைந்ததும் சாமான் களை நிலையத்திலேயே இறக்கி வைத்து விட்டுத் தம்புவைக் &Pr:#థHT: இருக்கச் சொல்லித் திருக்கோயிலை அடை கின்றோம். திருச்சுற்றிலுள்ள ஆழ்வார்கள். ஆசாரியர் களைச் சேவித்துக் கொண்டு கருவறையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தோத்தாரிப் பெருமாளைப் பட்டாபிஷேகக் காட்சியில் காண்கின்றோம். இந்தக் காட்சி பரமபதநாதன் வைகுந்தத்தில் இருக்கும் இருப்பை நினை வுறுத்துகின்றது. நம்மாழ்வார்,

வானமா மலையே! அடி - யேன்தொழ வந்தருளே (5.7:6

என்ற திருவாய்மொழியில் இப்பெருமானுக்கு அடிமைத் தொழில் செய்ய விழைவதை நினைக்கின்றோம். வானமா மலை என்பது ஆழ்வார் தோத்தாத்திரிப் பெருமாளுக்குச் சூட்டும் திருநாமம், விண்ணளவும் சென்று கிட்டும்படி ஓங்கின மலைபோல் இராநின்ற எம்பெருமானை மலை யாகவே கூறுதல் பொருத்தமன்றோ? எம்பெருமானின் திருநாமமே ஊரின் திருநாமமாக மாறிவிட்டது. நான்கு நேரி என்ற இத்திவ்விய தேசத்தை வைணவப் பெருமக்கள் வானமாமலை என்றே வழங்கி வருகின்றனர்.

நாடோறும் நடைபெற்று வரும் எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனமே இத்திருத்தலத்தின் சிறப்பாகும். ஆறுபடி நல்லெண்ணெயுடன் சிறிதளவு சந்தன எண்ணெயைச் சேர்த்துக் காப்பு நடைபெறுகின்றது. இங்கனம் மூலவருக்குத் திருமஞ்சனம் செய்யப்பெற்ற எண்ணெயை ஓரிடத்தில்