பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நினைவுக் குமிழிகள்-2

சங்காலான சாமான்கள் பரப்பி வைத்துக்கொண்டு விற்பதைக் கண்டோம். இரவு எட்டுமணிபோல் சத்திரம் திரும்பினோம். மறுநாள் காலையில் உணவு தயாரிப்பதற்கு வேண்டிய சிறிதளவு விறகு, வேறு சில மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டோம்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டு கடல் நீராடச் சென்றோம். காலையில் கதிரவன் கடலிலிருந்து எழுகின்ற காட்சியைக் கண்டோம். நீராடி ஆடை மாற்றிக் கொண்டு குமரிமுனையில் தவம் செய்யும் பகவதி அம்மையின் திருக்கோயிலை நோக்கி நடக்கின்றோம். இங்கு அரபிக்கடல், வங்காளக் குடாக் கடல், இந்து மாக்கடல் மூன்றும் சேர்ந்து அலைவீசிக் கொண்டிருந்ததைக் கண்டோம். பெளர்ணமியில் ஒரே

நேரத்தில் பகலவன் மறைவதையும் சந்திரன் உதய

மாவதையும் காணலாம். பகவதி அம்மை தவம் செய் வதைப் பற்றிச் செவிவழியாக வழங்கும் கதைகள் பல , மூன்று கதைகளை இங்குக் கூறுவேன்.

முதல் கதை. பண்டைக் காலத்தில் பரத கண்டத்தை ஆண்ட ஆதிப் பரதனுக்கு எட்டுப் புதல்வர்கள்: குமரி என்று ஒரே மகள். ஏழு அண்ணன் மாருக்கு வள்ளி ஒரு தங்கையாக அமைந்ததைப் போல், எட்டு அண்ணன்மாருக்கு ஒரு தங்கை அமைந்தாள், இந்த ஒன்பது பேருக்கும் நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தான் பரதன். தென்பகுதி பெண்ணுக்குக் கிடைத்தது. குமரியிருந்து ஆண்ட இடமே இன்றைய குமரிமுனை என்கின்றது இக்கதை.

இரண்டாவது கதை : அன்னை செய்யும் தவத்தைக் குறித்தது. இக்கதை. நள்ளிரவில் வசுதேவர் கண்ணனை ஆயர் பாடியிலும், ஆயர் பாடியில் பிறந்த பெண் குழவியைச்