பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 நினைவுக் குமிழிகள்-2

கோலத்தில் நிற்கின்றாள்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நிற்கின்றாள். இவளது கிரீடத்தில் பிறைச் சந்திரன் ஒளி தருகின்றான். இவள் அணிந்திருக்கும் வைர் மூக்குத்தி மிக மிகப் பிரகாசமானது. அம்மையைக் கண்டு தரிசித்துவிட்டு உடல் புளகிக்க உள்ளம் நிறைவு பெறும் நிலையில் வெளிவருகின்றோம்.

தென்னெல்லை காத்தாளும்

தேவி! குமரீநின் பொன்னடியைக் கும்பிட்டுப்

போற்றுகின்றேன் - மன்னுடிகழ்ச் செந்தமிழ்நாடு ஒன்றாகித்

தேவர்நாடு, ஒத்துலகில் சந்ததம் வாழவரம்

தா என்ற பாடலை இசைத்தவண்ணம் குமரிப் பகவதியிட மிருந்து விடை பெறுகின்றோம். -

தடைப்பட்ட திருமணம் : குமரியின் பேரழகால் ஈர்க்கப் பெற்ற சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் இவளைத் திருமணம் புரிந்து கொள்ள விரும்புகின்றான். இதற்காகத் தேவர்களைக் கூட்டித் தன் கருத்தை வெளியிடுகின்றான். தேவர்கள் கூடிய இடமே சுசீந்தரம். அது 'கன்னியம்பலம்" என்ற பெயரால் வழங்கி வருகின்றது. தாணுமாலயனின் விருப்பம் அறிந்த தேவர்கள் கன்னிக்குமரி திருமணம் புரிந்து கொண்டால் அவளுடைய தவம் பழுதாகி அசுரர்களை அழிக்க முடியாதே என்று மனம் கலங்குகின்றனர். இச் சமயத்தில் நாரதர் தோன்றி தேவர்களைச் சமாதானப் படுத்தித் தாமே முன்னின்று திருமணத்தைச் செய்து

1. தேவி : ແລgທrສລາມຸ້. - குமரிபகவதி . 1.