பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 நினைவுக் குமிழிகள்-2

விழிப்பாக இருக்கவேண்டும் என எச்சரித்தனர். ஏதாவது களவு போய்விட்டால் அரசர் காவலர்கள் (State Police) கவனிக்க மாட்டார்கள் என்றும் எங்களுக்குத் தெரிவித்தனர். அரண்மமனைச் சவுக்கையில் படுக்க ஏற்பாடு செய்து கொண்டோம். எங்கள் சாமான்களை ஒர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டோம்; கையில் மின்விளக்கு இருந்தது. சுப்பையர் உட்பட ஆண்கள் நால்வர்; பெண்கள் எழுவர். இவர்களுள் நால்வர் சிறிதளவு நகையுடன் இருந்தனர். இவர்களை நடுவில் படுக்கவைத்து. அடுத்துக் கைம்பெண்கள் மூவரை படுக்குமாறு அமர்த்தி இருபுற ஒரத்திலும் பக்கத் திற்கு இருவராக ஆண்கள் படுத்துக்கொண்டோம். இரவு ஒருமனி இருக்கும். செம்மறி ஆட்டுக்கிடா கொம்புபோன்ற மீசையையுடைய நல்ல திடகாத்திர மனிதர் ஒருவர் எங்க ளுடன் வந்து படுத்தார். அவர் வந்தது தெரிந்து மின் விளக்கு அடித்துப் பார்த்தோம். வேறிடத்தில் படுப்பது தானே? எங்களுடன் ஒட்டியபடி ஏன் வந்தீர்?' என்று கேட்டோம். அதற்கு அவர் மடியில் கனம் உள்ளது. இவ் ஆரில் திருடர்கள் அதிகம். அவர்கட்கு அஞ்சியே உங்களுடன் படுத்தேன்' என்றார். 'எங்கள் சாமான்களை அறையில் வைத்துப் பூட்டியுள்ளோம். உங்கள் மடிக் கனத்தையும் தாருங்கள்: உள்ளே வைத்துப் பூட்டிக் காலையில் தருவோம்' என்றோம். சிறிது கனைத்துவிட்டு அவரே ஒன்றும் பேசாமல் எழுந்து போய்விட்டார். "இவர்களிடம் - நம் பருப்பு வேகாது’ என்று எண்ணியே சென்றிருக்க வேண்டும் என்பதாக நினைத்துக் கொண்டோம். இஃது எங்கட்கு ஒரு வகையான அது வம். சுசீந்திரத்திவிருந்து திரு. சுப்பையர் எங்களிடமிருந்து விடைபெற்று ஊர் திரும் பினார். அய்யர் இப்போது (டிசம்பர் - 89) இல்லை; சில ஆண்டுகட்கு முன்னர் திருநாடு அலங்கரித்துவிட்டார்.