பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் II

அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. மிதி வண்டியில் வந்தவர் எதிரில் வந்த சில சிறுவர்களிடம் யாரப்பா உங்கள் தலைமையாசிரியர்?' என்று வினவ, சிறுவர்கள் 'சுப்பு’’ என்று சொல்ல, அதனைக் கேட்ட அவர் "நடராச அய்யர் இட்டிலி கடை சுப்பா? முன் குடுமி சோழியன் கடை சாஃபி ஆற்றுகிற சுப்பா?’ என்று நக்கலாகச் சொல்ல, மாணாக்கர் கள் கொல் லென்று சிரித்துச் சென்றதைக் காண நேர்ந்தது. மிதிவண்டியை வேகமாக மிதித்து மாணாக்கர்களைத் தாண்டிச் சென்று விட்டேன். ஒரு சிலர் ஹெட்மாஸ்டர் போகிறாரடா' என்று பேசிக் கொண்டதும் என் காதில் விழாமல் இல்லை. அன்று மறுநாளே பள்ளிலுள்ள ஆசிரியர் பெயர்ப் பதிவேட்டில் 'சுப்புரெட்டியார்' என்று பெயரை மாற்றி எழுதிக் கொண்டேன். ரெட்டி’ என்ற பின்னொட்டு (suffix) கிழவன் உணர்ச்சியைத் தருகின்றதே என்று வெறுத்து அதனை வெட்டத் தூண்டிய என் மனம் இப்போது (1941-42) கிழவன்' என்ற உண்ர்ச்சியை விரும்பி ஏற்றதைச் சிந்திக்கின்றேன்; இதைக் குறிப்பிடும் போதே சிரிக்கின்றேன்; சிரிப்பை அடக்கவும் முடியவில்லை.

வருகிற ஆண்டு நான்காவது படிவம் (9-வது வகுப்பு) தொடங்கித் தொடர்ந்து பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்க நினைத்து நிர்வாகம். அதற்குரிய விண்ணப்பமும் கல்வித் துறைக்கு அனுப்பியது. இரண்டு துரைகளும் கோடையில் ஊட்டி சென்றிருந்தபோது கோவையில் இறங்கி அப்போது பிராந்தியக் கல்வித்துறை அலுவலராக இருந்த திரு W. R. அரங்கநாத முதலியாரைப் பார்த்து நான்காவது படிவம் திறக்க அநுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். திரு. முதலியார் பிராமணரல்லாதாருக்குரிய பள்ளிகட்குச் சலுகை காட்டுவார் என்ற பெயர் பெற்றிருந்தார். இந்தப் பெயரால் மயங்கி துரைமார்கள் இருவரும் முயன்றனர்.