பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி . . 335.

சுசிந்திரம் பழையாறு என்ற ஆற்றின் கரையிலுள்ளது. ஆற்றின் தென்கரையிலிருந்து சுமார் 300 அடி தொலைவில் உள்ளது. காலையில் நீராடி மாற்றுடை உடுத்திக்கொண்டு; திருக்கோயில் சென்று தானுமாலயனைச் சேவிக்கின்றோம். கருவறையில் இவர் இலிங்க வடிவமாக இருக்கின்றார். திரு மஞ்சனக் காலம் தவிர மற்றைய நேரத்தில் கவசத்தால் மூடப் பெற்றே இருக்கின்றார். இங்குத் திருமுழுக்காட்டும் எண்ணெய் பூமிக்குள் சென்று கன்னியாகுமரித் தீர்த்தத்தில் கலந்து விடுவதாக ஐதிகம். இங்குள்ள ஆஞ்சனேயர் புகழ் பெற்றவர், 18 அடி உயரத்தில் மிகவும் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றார். r

தானுமாலயன் இணைந்து இருப்பதைப் பற்றிய கதை ஒன்றுண்டு. அத்திரி முனிவரின் மனைவி அனசூயை கற்பில் சிறந்தவன் என்பதை நாம் அறிவோம். திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டல்லவா? முனிவர் தம் மனைவியை ஆச்சிரமத்தில் தனியாக விட்டு இமய மலைக்குத் தவம் செய்யச் சென்றிருக்கின்ற சமயத்தில் கலகப்பிரியர் நாரதர் நாமகள் பூமகள், மலைமகள் இவர் களிடம் வந்து இரும்புக் கடலைகளை வேகவைத்துத் தருமாறு வேண்ட, அவர்கள் அது தம்மால் ஆகாது என்று சொல்லவே, நாரதர் அனசூயையிடம் வந்து அவற்றைக் கொடுக்க, அவள் தனது கற்பின் மகிமையால் வேகவைத்து அளிக்கின்றார். இதைத் தேவியர் மூவரிடம் சொல்லி வைக்கின்றார் கலகப் பிரியர். தேவியர் ஏவியவண்ணம் மும்மூர்த்திகளும் அனசூயையின் கற்பைப் பரிசோதிக்கப் புறப்பட்டு வருகின்றனர். அத்திரி முனிவரின் ஆச்சிரமத்திற்கு அதிதிகளாக வந்தவர்களை உபசரித்து உணவு பரிமாற முனைகின்றபோது மும்மூர்த்திகளும் தமக்குப் பிறந்தமேனி யாக உணவு பரிமாற வேண்டும் என்கின்றனர். அனசூயை தம் கற்பின் மகிமையால் அவர்கள் மூவரையும் மூன்று ാ அமுதுட்டுகின்றாள். நாரதர் மூலம்