பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 நினைவுக் குமிழிகள்-2

கருவறைக்கு முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தின் அடித் தளக் கருங்கல் 20 அடி சதுரத்தைக் கொண்டது; கல்லின் கனம் இரண்டரையடி. இஃது ஒற்றைக்கல் மண்டபம். திருவாட்டாற்றுத் திருக்கோயிலிலும் இத்தகைய அடித்தளக் கல்லையுடைய மண்டபம் உள்ளது. இரண்டு கோயில்களும் ஒரேமாதிரி அமைப்பினைக் கொண்டனவாயினும் சிற்பங்கள். முதலியவற்றை நோக்கத் திருவாட்டாற்றுத் திருக்கோயில் பழைமையுடைய தெனத்தோன்றுகின்றது. அங்குப் பெரும் பாலும் கேரள நாட்டுப் பணி அதிகம்; இங்குத் தமிழ்நாட்டுப் பாணி அதிகம். ஒற்றைக்கல் மண்டபத்திலிருந்துகொண்டு மூன்று திருவாயில்கள் மூலமாகவும் தெற்கு நோக்கிச் சாய்ந்த திருவயிடேகமும் வடக்கு நோக்கி நீட்டிய திருவடிகளையும் கொண்டு கிழக்கு நோக்கிய நிலையில் அனந்தன்மீது பள்ளி கொண்டுள்ள பதுமநாபனைக் கண்ணாரக் கண்டு சேவிக் கின்றோம். பாதாதிகேசமாகச் சேவித்த நாம் திருவரங்கத்து அமுதினைச் சேவித்த திருப்பாணாழ்வாரின் அநுபவ நிலையை அடைகின்றோம். ‘என் அமுதினைக் கண்ட கண் கள் மற்றொன்றினைக் காணாவே' (அமலனாதி 10).

இந்தத் திருக்கோயில் திருவட்டாற்றுத் திருக்கோயில் போலவே சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிகள் ஏறியே கோயிலினுள் நுழைதல் வேண்டும். கோயிலின் நாற்புறமும் கனமான கோட்டைச் சுவர்கள் சூழ்ந்துள்ளன. திருக்கோயிலுக்கருகிலேயே திருவாங்கூர் அரசரின் அரண் மனையும் உள்ளது. அவர் அரண்மனையிலிருந்து திருக் கோயிலுக்குவந்து போதற்குத் தனிச் சுரங்கவழி உண்டு. 100 அடி உயரமும் ஏழு நிலைகளுமுள்ள கோபுரம் கம்பீரமாக நின்று தொலைவிலுள்ளவர்களையும் ஈர்க்குந் தன்மையது. 5. இந்த ஆசிரியர் எழுதியுள்ள மலை நாட்டுத் திருப்பதிகள்’ (கட்டுரை - 2) என்ற நூலில் காண்க. மலைநாட்டுத் திருத்தலங்களை 1969இல் என் மனைவியுடனும் இருமக்களுடனும் சேவித்தேன்.