பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி 341

கோபுரத்திலும் மண்டபங்களிலும் தூண்களிலும் பல்வேறு சிற்பங்களைக் காணலாம். இவை யாவும் தென்னிந்தியச் சிற்பங்களே. திருவாட்டாற்றுத் திருக்கோயிலிலுள்ளவை போலவே கோயிலைச் சுற்றிய பிராகாரத்தில் ஆயிரக் கணக் கான பித்தளை விளக்குகள் பொருத்தப் பெற்றுள்ளன. திருவிழாக் காலங்களில் இவை ஏற்றப்பெற்று விழாவிற்குப் பொலிவினையும் கவர்ச்சியினையும் தரும். இரவு எட்டுமணி சுமாருக்கு இருப்பூர்தி நிலையத்து விடுதியில் உணவு கொண்டு நம் விடுதிக்குத் திரும்புகின்றோம்.

வந்த நாளைத் தவிர திருவனந்தபுரத்தில் இரண்டு நாள் தங்குகின்றோம். ஒருநாள் காலையில் உணவு விடுதியில் சிற்றுண்டி கொண்டு மிருகக் காட்சிச் சாலைக்குப் (Zoo) போகின்றோம். சென்னையில் அக்காலத்தில் இருந்ததைவிட இது மிகச் சிறப்பாக இருந்தது. சிங்கம், புவி முதலிய மிருகங் கள் இயற்கைச் சூழ்நிலையிலேயே திரியும்படி விடப் பெற்றி ருந்தமை மிகச் சிறப்பு. சென்னையில் காணப்பெறாத பல விலங்குகளை இங்குப் பார்க்க முடிந்தது. பெரிய இடம்; சுற்றிப் பார்ப்பதற்கு அரைநாள் போதாது. மிகச் சிரமத் துடன் விரைவாக வீடு திரும்பினோம். பகலுணவு கொண்டு சிறிதுநேரம் ஒய்வு. மாலையில் கோவளம் கடற்கரை சென்று சுற்றிப் பார்த்துத் திரும்பினோம்.

அடுத்தநாள் காலையில் இரவுக்கும், மறுநாள் காலைக்கும் உணவு தயாரித்துக் கொண்டோம். ஒன்பது மணிக்குத் தம்புவையும் கூட்டிக் கொண்டு நகரக் குடிநீர்த் திட்ட அமைப்பைப் பார்க்கச் சென்றோம். சென்னையில் கூட இத்தகைய அமைப்பு இல்லை. பல்வேறு நிலைகளில் நீர் பல்வேறு முறைகளில் தூய்மையாக்கப் பெறுகின்றது. இறுதியில் குளோரின் சிறிது கலக்கப்பெற்று பெரிய குளம் போன்ற அமைப்புகளில் சேகரிக்கப் பெறுகின்றது. இந்தக் குளங்களினின்றும் பல்வேறு இடங்கட்கு விநியோகிக்கப்