பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 நினைவுக் குமிழிகள்-2

பெறுகின்றது. திருவனந்தபுரம் குடிநீர் மிகச் சுவையாக இருக்கும். குளிக்கும்போது சோப்புப் போட்டால் மிகவும் வழுவழுப்பாக இருக்கும்; சோப்பும் எளிதில் கரையும். எல்லோருமே திருவனந்தபுரம் நீரை அநுபவித்தோம். இத்தகைய நீரைத் திருமலையில் பாபநாசம் அருவியிலும் திருப்பதி கபில தீர்த்த அருவியிலும்தாம் கண்டோம்.

அன்று மாலையே மதுரையை நோக்கிப் புறப்பட லானோம். திருவனந்த புரத்திலிருந்து கொல்லம் வரை யிலும் அகலப் பாதை வண்டி. கொல்லத்திலிருந்து மீட்டர் பாதை வண்டி. எங்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு மாற்றுவது சஷ்டமாகத்தான் இருந்தது. என்ன செய்வது? திருத்தலத்தில் பெற்றது சுகாதுபவம், பயணத்தில் அநுபவித்தது சிரமாதுபவம்! அதுவும் வயது மிக்க மூதாட்டி களைச் சேர்த்துக் கொண்டு பயணம் செய்வதில் ஏற்படும் சிரமங்கள் சொல்வி முடியா. எப்படியோ கொல்லம் துரித

வண்டியில் ஏறிக் கொண்டோம்.

குமிழி-102

38. திருத்தலப் பயணம்-பழகி

கொல்லத்திலிருந்து இரவு புறப்பட்ட விரைவு இருப் பூர்தி மறுநாள் காலையில் மதுரை சந்திப்பை அடைந்தது சாமான்களைப் பயணிகள் தங்குமிடத்தில் வைத்துக் கொண்டே நிலையத்திலேயே குளித்து விட்டோம். முன்னர்த் தெரிந்தவரிடம் தந்திருந்த அரிசியைத் திரும்பப் பெற்று நிலையத்திற்குக் கொணர்ந்தோம். நிலையத் திலேயே சிற்றுண்டி அருந்திப் பழநி பக்கமாகச் செல்லும் இருப்பூர்தியை எதிர்பார்த்துக் கொண்டுக் காத்திருந்தோம். வண்டி வந்ததும் அதில் ஏறிக் கொண்டோம். இந்த வண்டி திண்டுக்கல் - பழநி வழியாகக் கோவைக்குச் செல்லுவது.