பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-பழநி 343

மாலை 5 மணிக்குப் பழநியை அடைந்தோம். அக்காலத்தில் இன்றிருப்பது போன்ற வசதிகள் நிலையத்தில் இல்லை.

பழகி : கோட்டாத்துாரிலுள்ள ஒரு பண்டாரத்துக்கு உறவினர் ஒருவர் பழநியில் இருந்தார். அவருக்கு முன்ன தாகவே எழுதியிருந்தோம். அவர் இருப்பிடத்தை விசாரித் துக் கொண்டு அவரிடம் சென்றோம். அவர் தங்குவதற்கும் இடவசதி செய்து தந்தார். முகம் கழுவிக் கொண்டு கடைத் தெருவைச் சுற்றினோம். விபூதிப் பொட்டலங்கள், பஞ்சாமிர்தம் வாங்கிக் கொண்டோம். மலையடிவாரத் தருகிலேயே இடம் கிடைத்ததால் எல்லா வசதிகட்கும் வாய்ப்பு. எல்லோரும் ஒர் உணவு விடுதியில் காஃபி அருந் தினோம். தம்பு விறகு வாங்கி இர்வு உணவுக்குத் தயார் செய்யத் தொடங்கினார். பாலுக்குப் பண்டாரம் ஏற்பாடு செய்தார். இரண்டு நாட்கள் பழநியில் தங்கினோம்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நான் மட்டிலும் மொட்டையடித்துக் கொண்டேன். இது மொட்டையாண்டி பழநியப்பனுக்கு உகந்த வழிபாடு. எல்லோரும் சரவணப் பொய்கையில் நீராடி னோம். இப்போதுள்ளவை போன்ற வசதிகள் அக்காலத்தில் இல்லை. பொய்கையில் இறங்கி நீர் எடுத்து வந்து மேலே குளிக்க வேண்டும். குளித்தபின் அறைக்குவந்து ஆடைகளை மாற்றிக் கொண்டு மலைக்குப் போகத் தயாரானோம்.

வினைதவிர் மருந்தே போற்றி

மெய்யினர் விருந்தே போற்றி

நினைதரு தெருளே போற்றி

நித்தியப் பொருளே போற்றி