பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நினைவுக் குமிழிகள்-2

வணைமலர் அடியாய் போற்றி

மாமணி முடியாய் போற்றி

தனை நிகர் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி"

என்ற பாடலை நா நவிற்ற, பண்டாரம் வழிகாட்ட, மலைக் குச் சென்று பழநியாண்டியை வழிபட்டோம். பண்டாரம் கூட வந்ததால் நல்ல தரிசனம் கிடைத்தது. மலையிலிருந்து இறங்கி வந்து தங்கும் இடத்தை அடைந்தோம். தம்பு உணவைத் தயாராக வைத்திருந்தார். உணவு கொண்ட பின் சற்று ஒய்வு. இரவு உணவும் தயாராகிவிட்டது. இதனால் தம்புவையும் கூட்டிக் கொண்டு திருஆவினன்குடியி லுள்ள முருகனை வழிபடச் சென்றோம்.

திருஆவினன்குடி : இது பழநி என்னும் தலத்தில் மலையடிவாரத்தில் உள்ள திருக்கோயில். ஆ(ற்}றுபடை வீடு' களில் ஒன்று இன்றும் இஃது ஆவிநன்குடி என்னும் ஊரைச் சேர்ந்த பழைய கோவில், மலையின்மீதுள்ள தண்டபாணிக் கோயில் பிற்காலத்தது. சங்க காலத்தில் இப்படை வீட்டைப்பற்றிக் குறிப்பு உள்ளது. சங்க இலக்கியங்களில் தனிப் பெருமை வாய்ந்த அகநானுாற்றில், முருகன் நற்போர் நெடுவேள் ஆவி அதுகேட்டு யானை பொதினி, ஆங்கண்' (நெடுவேள் ஆவி-பெருமையுடைய வேள் ஆகிய ஆவி)

என்ற குறிப்பு மாமூலனார் வாக்காகக் காணப்பெறுகின் jūš. அதே நூலில்,

1. மாம்பழக் கவிசிங்க நாவலர் : பழநிக்கோயில்

விண்ணப்பம்-7. 2. பழநித் தலவரலாறு-பக் 14 (ப தேவஸ்

வெளியீடு.) 14 (பழநி தேவஸ்தான 3. அகம்-1