பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-பழநி 345

முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி

பொன்னுடை நெடுநகர்ப் பொதினி." என்று மற்றொரு குறிப்பும் உள்ளது. ஆவியர் என்ற வேளிர் வகுப்பினரின் தலமே ஆவிநன்குடி, பொதினி' என்ற சொல் காலப் போக்கில் பழகி எனத் திரிந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. சங்க காலத்தில் பழநி மலை நாட்டை வேள் ஆவியின் குடியினர் ஆண்டு வந்தனர். அவர்களுள் கடைஎழு வள்ளல்களுள் ஒருவரான வையாவிக் கோப்பெரும்பேகன் என்பவன் மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல்; ஆவிகுடியினர் வாழ்ந்த ஊர் ஆவிகுடி' என்று வழங்கப்பெற்று ஆவிநன்குடி' என்ற சிறப்புப் பெயராக மாறியது போலும். ஆவிநன்குடி என்ற பெயர் ஆவினன் குடி எனத் தவறாக எழுதப் பெற்றுச் சில புராணக்கதை களுக்கும் காரணமாயிற்று. திரு'வாகிய பெரிய பிராட்டி யாரும் (இலக்குமி), 'ஆ' என்ற காமதேதுவும், இனன் ஆகிய சூரியனும் வழிபட்டதால் ஆவினன்குடி என இக்கோயிலுக் குப் பெயர் வந்ததாகத் தலபுராணம் கூறுகின்றது. இவை மட்டுமா? "குடி என்பதில் ‘கு’ என்பதற்கு பூமி என்றும், டி’ என்பதற்கு அக்கினி என்றும் பொருள் கொண்டு நில மகளும் நெருப்புக் கடவுளும் கூட சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றனர் என்று செப்புகின்றது. தலபுராணம். இந்த இருவருக்கும் கூட மற்றவர்களுடன் இக்கோயில் மண்டபத் தில் உருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன! புராணச் செய்தி கள் வரலாற்று நிகழ்ச்சிகளை மறைத்து விடுகின்றன என்பதற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு.

பிரணவத்தின் பொருள் அறியாத நான்முகன் முருக னால் சிறையிடப் பெற்றதும், அந்த நான்முகனை விடுவிப்பதற்காக, முன்னே முன்ரிவர்கள் புக, அவர்கட்குப்

4. Q్మ-6!