பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 நினைவுக் குமிழிகள்-2

நிற்கின்றோம். ஒரு மணி நேரத்தில் தரிசனம் முடிந்து விடுகின்றது. உண்டியவில் காணிக்கையைச் செலுத்திவிட்டு பிரசாதங்கள் பெற்று உண்டு விட்டு, இலட்டுகள், திருமால் வடைகளை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு வருகின்றோம். திருப்பதிப் பயணம் அக்காலத்தில் அரிதாத தால் சமையல் தம்புவையும் கூட்டிக்கொண்டுவருகின்றோம்.

திரும்புக்போது நான், என் மனைவி, என் மைத்துனர் மனைவி. சடமங்கலம் அம்மாள் நடையில் இறங்குகின்றோம். தம்பு உட்பட மற்றவர்கள் பேருந்தில் திரும்புகின்றனர். அவர்கள் சத்திரத்தில் உணவு தயாரித்து வைக்கின்றனர். நாங்கள் நடையில் திரும்பும் போது, -

கூன் கொண்டு சென்றவன் கூன்நிமிர்ந்து ஒட,

குருடன் கொம்பில் தேன் என்று காட்ட, முடவன் அத்தேனை எடுக்கஅயல், தான்நின்ற ஊமை, எனக்கென்று

கேட்க தருவன்வரம் வான்நின்ற சோலை வடமலை

மேல்நின்ற மாதவனே."

என்ற அழியா வாழ்வு பெற்ற பழம் பாடல் ஒன்றை நினைவு கூர்ந்த வண்ணம் இறங்கி வருகின்றோம். சுமார் 12மணிக்கு அடிவாரத்திற்கு வந்துவிடுகின்றோம். வெய்யலின் கொடு மையால் பொடி தாங்க முடியவில்லை. எதிர்பாராத வண்ணம் குதிரை வண்டி கிடைக்கின்றது: அதில் ஏறிச் சத்திரத்திற்கு பகல் ஒரு மணிக்கு வந்து சேர்கின்றோம். முன்வந்தவர்கள் உணவு தயாரித்து உண்டு ஒய்வு கொண்

8. ஓர் பழம்பாடல்