பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-பழநி 351

டிருக்க, நாங்கள் உண்டு உண்டு அவர்களுடன் சேர்ந்து கொள்ளுகினறோம். உண்ட களைப்பு தொண்டர்க்கும் உண்டல்லவா?

மாலை ஐந்துமணி சுமாருக்கு கோவிந்தராஜ சுவாமி கோயில், கோனேறு அருகில் உள்ள கடைகள் இவற்றைச் சுற்றிப் பார்த்துச் சில பொருள்களை வாங்க நினைக்கின் தோம். இங்குச் சந்தனக்கல், மரத்தாலான சாமான்கள், திருமண் இட்டுக் கொள்ளப் பயன்படும் நாமக்கட்டிகள், திருச் சூர்ணம் இவை வைக்கும் அழகிய ஓலைப் பெட்டி முதலிய வற்றை வாங்கிக் கொண்டோம். நான் சைவனாயினும் என் வீட்டிற்கு அதிகமாக வருபவர்கள் வைணவர்கள்; பாக வதர்கள், எங்கள் சமையலை ஏற்றுக் கொள்ளாமல் தாங்களே நளபாகம் பண்ணி உட்கொள்ளும் வீரவைணவர் களும் எங்கள் உறவினர்கள். இவர்கட்குப் பயன்படும் பொருட்டே திருமண்காப்புக்குரிய சாமான்களை வாங்கி னேன். நான் காரைக்குடியில் இருந்தவரை இவை என் வீட்டிலிருந்தன. கம்பன் விழாவுக்குத் தவறாது வரும் இராம ராசன் (கம்பராமன்) பூதுர் கி. வேங்கடசாமி ரெட்டியார் இவர்கட்கும் ஒரு முறை வந்த திரு. வே. வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்கட்கும் பிறருக்கும் இவை பயன் பட்டு வந்தன.

அடுத்த நாள் அதிகாலையில் 2மணி சுமாருக்கு மூட்டை முடிச்சுகளுடன் திருச்சி செல்லும் இருப்பூர்தியில் ஏறிவிடு கின்றோம். வண்டி சுமார் 7மணிக்கு காட்டுப்பாடியை அடைகின்றது. பல் தேய்த்துக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சிற்றுண்டி - காஃபி அருந்துகின்றோம். சுமார் அரைமணி நேரம் வண்டி நிற்பதால் இவற்றை யெல்லாம் செய்து கொள்ள வசதியாக அமைகின்றது.