பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-திருவண்ணாமலை 353

கிடைத்தது. காய்கறிகளும் கிடைத்தன. தம்பு முதலில் குளித்துவிட்டு சமையலைத் தொடங்கினார். பெண்கள் காய்கறிகளை வெட்டுதல் போன்ற பணிகளைச் செய்தனர். 2மணிக்கு உணவு கொண்டோம். சற்று ஓய்வு கொண்டோம். மாலை ஐந்துமணி சுமாருக்கு திருக்கோயில் வழிபாட்டிற்குச் சென்றோம். நடேந்தே செல்லும் அளவிற்குக் கோயில் அருகில் இருந்தது. பஞ்ச பூத தலங்களுள் இது தேஜஸ் (தேசு) என்னும் தீயைக் குறிக்கும். மணிவாசகப் பெருமான்,

பிரமன் அரியென் (று)

இருவரும்தம் பேதைமையால் பரமம் யாம்பரம்

என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழல் உருவாய்

அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா

தோணோக்கம் ஆடாமோ."

என்ற பாடலில் கூறும் அழல் உருவே மலையுருவாய் உள்ளது என்று நினைந்த வண்ணம் திருக்கோயிலுக்கு வருகின்றோம். அண்ணாமலையார், உண்ணாமுலையம்மை இவர்கள் திருவுருவங்கள் அழகும் அருளும் நிரம்பியவை; இவர்களைச் சேவிக்கின்றோம். இத்தலத்தை நினைத்தாலே முத்தி தருவது. அருணகிரிநாதர் வாழ்ந்து முத்தி பெற்றதலம். வல்லாள மகாராசன் கோபுரவாயிலுள் நுழையும்போது வடபுரம் இருக்கும் முருகனே, இக்கோபுரத்தின் மேலிருந்து அருணகிரியார் குதிக்கும்போது அவருக்குத் தீங்கு வராமல் காத்தருளிய பெருமான். இவரை வழிபடுகின்றோம்.

1. திருவா. திருத்தோணோக்கம் - 12 நீ-23