பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிக் குடும்பம் வைத்த இல்வாழ்க்கை 13

யான் அறிந்தேன். உயர்நிலைத் தொடக்கப்பள்ளித் தலைமை யாசிரியர் டி. எஸ். இராச கோபாலய்யரைக் கலந்தே விண்ணப்பம் அனுப்பப்பெற்றது என்பதையும் பின்னர் அறிந்தேன். 'அநுபவம் இல்லாத இளைஞன் என என்னைப் புறக்கணித்தனர் போலும் என ஊகித்துக் கொண்டேன்.

குமிழி-66

2. தனிக்குடும்பம் வைத்த இல்வாழ்க்கை

- திருமண ஆகி, ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன. இதுகாறும் தனிக் குடும்பம் நடத்திய பழக்கம் இல்லை. உணவு விடுதிகளில் உணவு, மாமனார் வீட்டு உணவு என்ற முறையில்தான் என் வாழ்க்கை பொறுப்பற்ற முறையில் நடைபெற்று வந்தது. நடுநிலைப் பள்ளியில் தலைமை யாசிரியனாகப் பணியேற்ற பிறகுகூட மூன்று மாத காலம் "மாணிவாழ்க்கை தான். நடுநிலைப் பள்ளியின் கட்டட அமைப்பு தமிழ் எழுத்து ட-வைப் போல இருக்கும். மேற் பக்கப் பகுதியில் மூன்று அறைகள் இருந்தன. தென்புற ஓர் அறைக்குள் ஒர் உள்ளறை இருந்தது; இதுதான் தொடக்கத் தில் தலைமையாசிரியர் அறையாக அமைந்தது. வடபுறம் ஓர் அறைக்குள் உட்புறமாக ஒரு பெரிய அறை இருந்தது. இது நிரந்தரமான நூலகத்திற்குப் பயன் பட்டது. வடபுறமுள்ள பகுதியில் உள்ள இரண்டு அறைகள் குடும்பம் நடத்துவதற் கேற்றவாறு படுக்கை அறை, கூடம், உண்ணும் அறை, சமையல் அறை என்று பிரிவு செய்யப்பெற்று இருந்தன. இந்த இரண்டு அறையை பின்புறமாகத் தாழ்வாரம் இறக்கிக் குளியவறையும், விறகு வைக்கும் இடமும் அமைந் திருந்தன. இரண்டு அறைகட்கும் பின்புறமாகப் பத்தடி