பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவுக் குமிழிகள்-2

மின்னைப் பொருவு முலகமயல்

வெறுத்தோ ருள்ள விளக்கொளியே! மேலும் கீழும் நடுவுமென

விளங்கி நிறைந்த மெய்த்தேவே! தன்னைப் பொருவுஞ் சிவயோகந்

தன்னை யுடையோர் தம்பயனே! தணிகா சலமாந் தலத்தமர்ந்த

சைவ மணியே! சண்முகனே!” என்ற பாடலை மனமுருகிப் பாடி அதுபவித்தேன். இராம லிங்க வள்ளலின் பாடல்கள் உள்ளத்தை உருக்கும் முறையே தனிச்சிறப்புடையது. பதினொரு மணிக்குத் திரும்பினோம். சமையல் தொடங்கி ஒரு மணியளவில் முடிந்தது. உண்டு ஒய்வு எடுத்துக்கொண்டோம். சென்னை செல்லும் இருப் பூர்தி மாலை 6 மணிக்கு வருகிறதாக அறிந்து இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து தயாராக இருந்தோம். வண்டி இரவு ஒன்பது மணி சுமாருக்கு சென்னை வந்தடைந்தது வண்டியிலேயே இரவு உணவு கொண்டுவிட்டோம். நிலையத்தருகில் மூர் மார்க்கெட்டுக்கு அருகில் இராவ்பகதூர் இராமசாமி முதலியார் சத்திரத்தை விசாரித்துக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேர்ந்தோம். ஒரே கூட்டம். உள்ளேயே நுழைய முடியவில்லை. சத்திரத்தின் வெளியே உள்வாசலில் சாமான்களைக் குவியலாக வைத்துவிட்டு அவற்றைச் சுற்றிலும் படுத்துக் கொண்டோம்.

சென்னை - மயிலை துறையூரிலிருக்கும்போதே பன் மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியாருக்கு எழுதி யிருந்தோம் நாங்சள் வரும் உத்சேத் தேதியைக் குறிப்பிட்டு. அச்சமயம் எல்லோரும் விடுமுறைக்கு ஊர் சென்று விடுவார்கள் என்றும், தான் மட்டிலும் தனியாக இருப்பதால்

2. முதல் திருமுறை. செல்வச் சீர்த்தமாலை - 4