பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-திருவணணாமலை 357

வசதியாகத் தங்கலாம் என்றும் எழுதியிருந்தார்கள் அப்போது அவர்கள் மயிலாப்பூர் வடக்கூர் செல்வவிநாயகர் தெருவில் 13-வது எண்ணுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள் நான் இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து தங்கிப் போனதுண்டு. சென்னை வந்த போதெல்லாம் இங்குத்தான் தங்குவது வழக்கம். ஒரு மாட்டுவண்டி பிடித்து சாமான்களை ஏற்றி சாமான்களுடன் தம்புவை வருமாறு பணித்தோம். வண்டிக் காரன் நல்லவனாக அமைந்தான். அவன் பாதுகாப்பாக வருவதாகக் கூறினான். தாங்கள் டிராம் வண்டி ஏறி (அக்காலத்தில் டிராம் வண்டி சென்னையில் இருந்தது) மயிலாப்பூர் வந்தோம். தண்ணிர்த்துறையருகில் (வட மொழிக் கல்லூரியருகில் உள்ளது.) இறங்கி முண்டகக் கண்ணியம்மன் கோயில் தெரு வழியாக நாட்டு சுப்பராய முதலித் தெருவை அடைந்து அதன் குறுக்கேயுள்ள வடக்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவிலுள்ள வீட்டையடைந் தோம். நாங்கள் வந்து அரை மணி நேரத்தில் சாமான் களுடன் தம்புவும் வந்து சேர்ந்தார்.

நான் வந்ததும் அனைவரையும் மயிலை முனிவர் ரெட்டியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். ரெட்டியார் அவர்கள் சமையலறை, குளியலறை முதலியவற்றைக் காட்டினார்கள் இரவில் மாடியில் தங்கலாம் என்று சொன் னார்கள். கோவிந்தன் என்ற பணியாள் எனக்கு நன்கு தெரிந்தவன். எல்லாவித உதவிகட்கும் அவனை வைத்துக் கொண்டோம். பால், விறகு, காய்கறிகட்கு அவன் ஏற்பாடு செய்து விட்டான். சென்னையில் மூன்று நாட்கள் தங்கினோம்.

முதல் நாள் : காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நீராடிக் கோயிலுக்குப் போவதற்குத் தயாரானோம். போகும் வழியில் ஓர் உணவு விடுதியில் சிற்றுண்டி கொண்டு