பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 நினைவுக் குமிழிகள்-2

வில்பெரு விழவும் கஞ்சமும் மல்லும்

வேழமும் பாகனும் வீழச் செற்றவன் தன்னை, புரம்ளரி செய்த

சிவன் உறு துயர்களை தேவை பற்றலர் வியக் கோல்கையில் கொண்டு

பார்த்தன்தன் தேர்முன்நின் றானை சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்

திருவல்விக் கேணிக்கண் டேளே." என்ற பாசுரம் இவரைக் கண்டவுடன் மிடற்றொலியாக வெளிப்படுகின்றது. இங்கனம் சேவித்தபின் வீடு திரும்பு கின்றோம். 枣

இரண்டாம் நாள் : அருங்காட்சியகம் வந்து பல்வேறு பழம்பொருள்கள் சேமித்து வகைப்படுத்தி வைக்கப்பெற்றி ருப்பதைக் கண்டு களிக்கின்றோம். அப்படியே அருகிலுள்ள கன்னிமேரா நூலகத்தையும் பார்வையிடுகின்றோம். அடுத்து, மிருகக்காட்கி சாலை (Zoo), உயர்நீதிமன்றம், கலங்கரைவினக்கு இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு பாரிமுனையில் சிற்றுண்டி அருந்தி திருவல்லிக்கேணி கடற் கரைக்குவந்து கடற்கரைக் காட்சிகளைக் கண்டுகளிக் கின்றோம். மாலை 7; மணி சுமாருக்கு அல்விக் கேணி நெடுஞ்சால்ைவந்து டிராம் ஏறி வீடு திரும்புகின்றோம்.

மூன்றாம் நாள் : அனைத்திந்திய வானொலி நிலையம், அடையாறு ஆலமரம், பிரம்மஞான சபை நூலகம் இவற்றை யெல்லாம் பார்வையிட்டுக் கொண்டு சென்னைப் பல்கலைக் கழகம் வருகின்றோம். பல்கலைக்கழக நூலகத்தைப் பார்வை இடுகின்றோம், மாலை ஆறு மணிக்கு விடுதிரும்பு கின்றோம். 7 மணிக்குள் இரவு உணவுகொண்டு ரெட்டி யாரிடம் விடைபெற்றுக் கொண்டு எழும்பூர் இருப்பூர்தி

مسسسسسسسسسسسسسسسسسسسسسس---سمس س--۳

5. பெரி. திரு. 23:1