பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-திருவண்ணாமலை 361

நிலையத்திற்கு வந்துவிடுகின்றோம். மறுநாள் அதிகாலை யில் திருச்சி டவுன் நிலையத்தில் இறங்கி நீராகார மடத்துக்கு வந்து சேர்கின்றோம்.

திருச்சியில் : அதிகாலையில் காவிரி நீராட்டம். காலையில் தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் சென்றுவந்தோம். தாயுமானவர் சந்நிதியில்,

தந்தை தாயும்நீ; என்னுயிர்த் துணையும் நீ;

சஞ்சல மது தீர்க்க வந்த தேசிக வடிவும்நீ; உனையலால்

மற்றொரு துணைகாணேன்; அந்தம் ஆதியும் அளப்பெருஞ் சோதியே!

ஆதியே! அடியார்தம் சிந்தை மேவிய தாயுமா னவன் எனும்

சிரகிரிப் பெருமானே!" -

என்ற பாடலை மனமுருகிப் பாடுகின்றோம். காலை பத்து மணிக்குள் எங்கும் சுற்றி அரங்கனைச் சேர்' என்ற முது மொழிக்கிணங்க திருவரங்கம் வருகின்றோம். உட்கோயில் களையெல்லாம் சுற்றிப்பார்த்து மூர்த்திகளையெல்லாம் வணங்கியபின் அரங்கன் சந்நிதிக்கு வருகின்றோம். வந்து, பாதாதிகேசமாகச் சேவிக்கின்றோம். இங்ங்ணம் சேவிக்கும் போது,

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது

இரங்கி, மற்று அவற்கு இன்னருள் சுரந்து

மாழை மான்மட நோக்கி உன்தோழி

உம்பி எம்பிஎன்று ஒழிந்திலை; உகந்து

6, தா.பா. ஆசையெனும்-10