பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 நினைவுக் குமிழிகள்-2

தோழன் நீஎனக்கு இங்குஒழி என்ற

சொற்கள் வந்(து)அடி யேன்மனத் திருந்திட ஆழி வண்ண நின் அடியிணை அடைந்தேன்

அணிபொ ழில் திரு வரங்கத்து அம் மானே!" என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் மிடற்றொலியாக வெளிப்படுகின்றது.

அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்(று) ஒன்றினைக் காணாவே," என்ற திருப்பாணாழ்வாரின் அநுபவம் பெற்றதாக ஒரு பிரமை ஏற்படுகின்றது. அரங்கனிடம் விடைபெற்றுக் கொண்டு நீராகாரமடம் திரும்பிப் பகல்உணவு கொண்டு பிற் பகல் 4மணிக்குத் துறையூர்வந்து விடுகின்றோம். அரங்கசாமி ரெட்டியார் முதலியோரைக் குதிரை வண்டியில் கோட்டாத் துருக்கு அனுப்பிவிட்டு நாங்கள் பள்ளியருகிலுள்ள எங்கள் வீட்டை அடைகின்றோம்.

இந்தக் ി எழு ാu് (டிசம்பர் ல் அரங்கசாமி ரெட்டியார், அவர் துணைவி, என் மாமியார். என் மைத்துன ரின் முதல் மனைவி, என் அருமை அன்னை யார், கே பி, சுப்பையார்.இவர்கள் யாவரும் திருநாடு அலங்கரித் துவிட்ட னர். சமையல்காரத் தம்பு எங்கோ இருக்கின்றார்; இருக்கும் இடம் தெரியவில்லை. என்னுடன் வந்த அரங்கசாமி ரெட்டி யாரின் கொழுந்தியார் (90 அகவையைத் தாண்டியவர்) கண் தெரியாமல் நினைவு தடுமாறிப் படுக்கையுடன் கிடந்தவரும் திருநாடு அலங்கரித்து விடுகின்றார். இறையருளால் நானும் என் மனைவியும் இரண்டு குமாரர்கள், மருமகள்மார்,இரண்டு பேரன்மார்கள், இரண்டு பேத்திமார்களுடன் நல்ல நிலையில் இருக்கின்றோம்.

7. பெரி. திரு. 5-8;1 8. அமலனாதி.10