பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் அறிவுச்சுடர் 365

કૂં

பான்மை, கவர்ச்சி ஆகியவற்றிற்கேற்றவாறு மொழிப்பாடங் களைக் கற்பிக்க வேண்டுமானால் சாதாரணமாகக் கொடுக்கப்பெறும் கட்டுரைப் பயிற்சிகள் மட்டிலும் போதா நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் வெளிவரும் புதிய இலக்கிய வகைகளையும் கவிதைகளையும் படிக்கும் மாணாக்கர்களுக்கு அவற்றைப்போல் தாமும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுதல் இயல்பு. தாய்மொழி யாசிரியர்கள் சிறிது முயற்சி எடுத்து இத்துறையில் தக்க கவனம் செலுத்தினால் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களிடம் சிறு கட்டுரைகள், சிறு நாடகங் கள், சிறு கதைகள், சிறுசிறு கவிதைகள் முதலிய இலக்கிய வகைகளைத் தாமாகவே எழுதும் ஆற்றலை வளர்த்துவிட

{ւpւգ պւն,

கருவிலே திருவுடைய டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், டாக்டர் திரிபுரசுந்தரி (லட்சுமி) போன்ற எழுத்தாளர்கள் ஏகலைவன் வமிசத்தவர்கள். பள்ளிகளில் படிக்கும்போதே எழுத்தில் ஆர்வம் கொண்டு இதழ்களைப் படித்தே சிறந்த எழுத்தாளர்களானார்கள். இப்படியே நான் அறியாத எண்ணற்ற எழுத்தாளர்கள் பிறர் தூண்டுதல் இல்லாமலேயே எழுத்துப் பழக்கத்தை வளர்த்துக்' கொண்டவர்கள். ஆனால் நாம் முயற்சி எடுத்தால் அரைவேக்காடாகவாவது பல எழுத்தாளர்கள் தோன்றலா மல்லவா? இப்படி நினைத்தது என் மனம். இதற்குப் பயிற்சி தரும் ஆசிரியர்கள் எழுத்துப் பழக்கம் உள்ளவர் களாக இருக்க வேண்டுமே என்றும் சிந்தித்தது. இப்படி, ஆராய்ந்து மூளையைக் குழப்பிக் கொள்வதைவிட செயலில் இறங்குவதே மேல் என்று தீர்மானித்தேன். முதலில் கையெழுத்தில் இதழ் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன். .