பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் அறிவுச்சுடர் 367

கவிதைகள், ஓரங்க நாடகங்கள். உரையாடல்கள், கற்பனைக் கட்டுரைகள், எழுதியதைக் கண்டு வியந்து போனேன். நான் பள்ளியைவிட்டு நீங்கிய பிறகு இம்முறையில் மேற்கொள்ளப் பெற்ற முயற்சி கைவிடப் பெற்றது. ஏதோ பாடம் சொல்வது, தேர்வு எழுதுவது, மதிப்பெண் வழங்குவது, மேற்வகுப்பிற்கு மாற்றப்பெறுவது என்று பழக்க மரபுப்படி பள்ளி நடைபெறுகிறதாக அறிகின்றேன். பள்ளி விழாக்கள் கூட உற்சாகமாகக் கொண்டாடப் பெறுவதில்லை. மூலவிசை (Micn Spring) சரியாக இல்லாவிட்டால் பொறி எப்படிச் சரியாக இயங்க முடியும்?

ஆட்டு வித்தால் ஆரொருவர் ஆடாதாரே :

அடக்கு வித்தால் ஆரொருவர் அடங்காதாரே: ஒட்டு வித்தால் ஆரொருவா ஓடாதாரே;

உருகு வித்தால் ஆரொருவர் உருகாதாரே; பாட்டு வித்தால் ஆரொருவர் பாடாதாரே,

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே; காட்டு வித்தால் ஆரொருவர் காணாதாரே;

காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே." என்ற அப்பர் பெருமானின் தனித் திருத்தாண்டகப் பாட லொன்றுடன் இக்குமிழி உடைகின்றது!

- குமிழி-105 41. கவிஞன் உள்ளம்

'கன்னற். பொருள்தரும் தமிழே நீ ஓர் பூக்காடு;

நானோர் தும்பி’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ்

இலக்கியப் பூங்காவில் ஏராளமான நறுமலர்கள் உள்ளன; தமிழ் இளைஞர்கள் யாவரும் தும்பிகளாக வேண்டும் என்ற

1. அப்பர் 6. 95 : 3