பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 நினைவுக் குமிழிகள்-2

எண்ணம் என்பால் எழுந்தது. சுதந்திர இந்தியா பிறப் பதற்கு ஆறாண்டுகட்கு முன்னர்தான் நான் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொண்டேன். இந்நிலையில் இக்கால ஆங்கிலக் கல்வியைக் குறைகூறும்,

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்.பின்

கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார் அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்

ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்; வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்.

வாழு நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்: துணியுமாயிரம் சாத்திர நாமங்கள்

சொல்லு வாரெட் டுனைப்பயன் காண்கிலார்: என்ற கவிதை யான்பெற்ற கல்வியைப் பற்றி நினைக்கும்படி செய்தது. எந்தக் கல்வியாயினும் தேர்வை நோக்கமாகக் கொண்டு கற்கும் கல்வியெல்லாம் இப்படித்தான் இருக்கும். ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலக் கல்வியை அடியோடு வெறுக்கும். தேசபக்தர்களைக்' காணும்போது எனக்கு மிகவும் வருத்தத்தை விளைவிக் கின்றது. இந்த ஆங்கிலக் கல்விதான் சுதந்திர இந்தியா பிறப்பதற்கு காந்தியடிகள், நேரு போன்றவர்கட்கு வழி காட்டியது; விசுவேஸ்வரய்யா போன்ற பொறியியல் விற்பன்னர்கட்கு நாட்டை வளமாக்குவதற்கு அறிவை நல்கியது. அதிகம் பேசுவானேன்? சுதந்திரம் கிடைத்து 42 ஆண்டுகட்குப் பிறகும் நம்மால் நம் நாட்டிற்கேற்ற ஒரு புதுக் கல்வித் திட்டத்தை வகுத்துக்கொள்ள முடிய வில்லையே. ஆங்கிலேயர் கண்ட கல்விமுறையில்தானே ஒட்டுவேலை செய்து கொண்டிருக்கின்றோம்? இதைப்பற்றி உணர்ச்சி வசப்பட்டு அதிகம் பேசுவதே வெட்கம்! வெட்கம்!!

1, பா. ச : சுயசரிதை - 23