பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் உள்ளம் 369

சுதந்திர இந்தியாவில் எல்லா மொழிகளிலுமே என்றுமே இல்லாத வேகத்தில் புதுமை இலக்கியம் தோன்றிய வண்ணம் உள்ளது. புதினங்கள், சிறுகதைகள், பெரும்பாலும் தழுவல்களாகவும், மொழிபெயர்ப்பாகவும், நமது வாழ்வில் ஒட்டாத காதற் கதைகளாக இருந்தபோதிலும் இவற்றையும் படிப்போர் பெருகி வருகின்றனர் என்பதில் ஐயம் இல்லை. கவிதைத் துறையிலும் சிலர் புது முறைகளைக் கையாண்டு பலர்க்கும் இன்பமூட்டி வருகின்றனர். இவர்களில் பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலம் போல் கவிதை இயற்றி வரும், கவிமணி, நாமக்கல் கவிஞர் பாவேந்தர் பாரதி தாசன் ஆகியோர் முத்திறப் புதுமைக் கவிஞர்களாவர். இவர்கள் பாரதியார் தோற்றுவித்த மறுமலர்ச்சி இலக் கியத்தை,

அரிதாள் அறுத்துவர

மறுதாள் பயிராகும்

என்ற முறையில் மறுபோகமாகப் பயிர் செய்து வந்த மாபெருங் கவிஞர்கள். இவர்கள்தாம் நான் தமிழ் இலக் கியத்தைக் கற்பதற்கு வேண்டிய சுவையையும் உணர்ச்சி யையும் என்பால் எழுப்புவதற்குக் காரணமானவர்கள்.

இட்டத்தட்ட ஒரு பத்தாண்டுத் துறையூர் வாழ்வில் நான் தமிழன்னையின் மடியில் அமர்ந்து கொண்டு தமிழமிழ் தம் பருகிக் கொண்டிருந்தேன். இந்தக் காலப்பகுதியில்தான் வித்துவான் பட்டம் பெற்றேன்; இதற்குச் சற்றுப் பின்னர் தமிழ் எம்.ஏ. பட்டமும் வந்து சேர்ந்தது. இவை யெல்லாம் வாழ்க்கையில் புகுவதற்கு வேண்டிய பயணச் சீட்டுகள்: ஆனால் இவை தமிழிலக்கியத்தை அநுபவித்துப் படித்தற்கு அடையாளங்கள் அல்ல; சிலருக்கு இவை கல்வியில் கரை கண்டோம்!” என்ற ஆணவத்தையும் தன் முனைப்பையும்

நி-24