பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 நினைவுக் குமிழிகள்-2

காவியப் போக்கிலும் கருத்து வளத்திலும் கம்பன் என் மனத்தைக்கவர்ந்ததுபோல் வேறு யாரும் கவரவில்லை. திருத்தொண்டர் புராணம் என் பக்தியை வளர்க்கக் காரணமாயிற்று. ஞானியார் குடும்பவழியில் வந்த என்னை என் இறுதிக் காலத்தில் பக்தியுடன் காலங்கழிப்பதற்கு எருவிட்டது இந்தப் புராணம்தான். இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் இராஜ நடையில் கம்பீரமாகச் செல்லுவதை அறியமுடிந்தது. நவில்தொறும் நூல்நயம் போலும் என்ற உண்மையை வள்ளுவப் பெருந்தகையிடத்தில் தான் நான் கண்டேன்: பரிமேல் அழகரின் உரை இதைக் காண எனக்குக் கைகொடுத்து உதவியது, ஒதற்கெளிதாய் உணர்தற்கரிதாக இருப்பதை இந்தத் தெய்வப் பனுவலில்தான் காண முடிந்தது.

பிற்காலத்து இலக்கியங்கள் யாவும் உயர்வு நவிற்சி யணிகள் செறிந்து சிந்தனைக்கு விருந்தாக இருப்பதை அவற்றைப் பயின்று அனுபவித்தபோதுதான் காணமுடிந்தது. சங்க இலக்கியங்கள் மீது என் நாட்டம் சென்றபோது தமிழ் மொழியின் உண்மை இயல்பையும் அதன் பெருமையையும், பழந்தமிழர்களின் சீரிய வாழ்க்கை முறைகளையும் சங்கப் புலவர்கள் காட்டும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற குறிக்கோள் நெறிகளையும் கண்டு அநுபவித்து மகிழ்ந்தேன். சீரிய தமிழ்த்தாய் எழில்களெல்லாம் திரண் டிருக்கும் மங்கைப்பருவத்துடன், ஓர் அரசிளங்குமரிபோல், அரியாசனத்தில் திருவோலக்கம் கொண்டிருக்கும் காட்சி யைச் சங்க இலக்கியங்களில் கண்டு மகிழ்ந்தேன். சங்க இலக்கியங்களைப் பயின்று வருவ தில் உள்ள இடர்ப்பாடுகள், ஆசிரியர் துணையின்றிப் பயில்வார்க்குத்தாம் தெரியும். 6) பாக்களைப் பயின்று அவற்றின் நுட்பங்களையும் 'இறைப் பொருள்களையும் மனநிறைவுடன் அறிந்து கொள்வதற்குப் பலமணி நேரம் செலவு செய்துள்ளேன்,