பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் உள்ளம் 373

பலாப்பழத்தை உரித்து அவற்றின் சுளைகளை எடுப்பது போன்ற சிரமம் இருப்பினும், ஒவ்வொரு பாடலும் ஒரு படித் தேனாகவே இனித்ததை அறிந்தேன். பாக்களைப் படித்துப் பொருள் உணர்வதில் உள்ள சங்கடங்களை எண்ணிப் பார்த்தால் தமிழ் இலக்கியத்தைக் கண்டு மக்கள் ‘தெனாவிராமன் பூனை போன்று மிரளுவதின் உண்மை யைத் தெளிந்தேன். புலி பயத்தை விடக் கிவி பயந்தான் பெரும் பாலோரை மிரளும்படி செய்கின்றது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிலையில் டாக்டர் மு, வரதராசன் அவர்களின் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை விருந்துகளும் விளக்கங்களும் இளைஞர்களின் சங்க இலக்கியக் காதலுக்குத் தூண்டுகோல்களாக அமைந்தன. இவரை அடுத்து கி.வா. சகந்நாதன் அவர்களின் சங்க நூற்காட்சிகள்' என்ற தொடரில் வெளிவந்த எட்டு நூல்களும் இதனை மேலும் வளர்த்தன. இந்த முறையில் தமிழன்னைக்கு என் தொண்டும் சேரவேண்டும் என்ற அவா என்னை உந்தியது. பொது வாக இலக்கியத்தில் ஒரு சுவையையும் சிறப்பாகச் சங்க இலக்கியத்தில் ஒரு நாட்டத்தையும் ஊட்டி விட்டால் எவரும் அவற்றை விரும்பிப் படிப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. இந்த நிலையில் யான் படித்து அநுபவித்த சங்கஇலக்கியப் பாடல்களில் சிலவற்றை அவ்வப் போது சிறுசிறு கட்டுரைகளாக எழுதிக்கொண்டு வந்தேன். இவற்றை அக்காலத்தில் துறையூரில் வெளிவந்து கொண் டிருந்த கிராம ஊழியன்’ என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றிவந்த வல்லிக் கண்ணன் என்பவரிடம் காட்டிய துண்டு. காரணம், அவர் பொது மக்களின் சுவையை நன்கு அறிந்தவர், அவரும் இவை நன்று’ என ஆமோதித்தார். ஒழிந்தநேரங்களில் என் சோதர ஆசிரியர்கட்கும் அவற்றைந் படித்துக்காட்டுவேன். எல்லோருமே அவற்றை நன்கு